10 அணிகள். 60 நாட்கள். சென்னையில் முதல் போட்டி. 15 ஆவது ஐ.பி.எல் தொடர் – துவங்கும் தேதி அறிவிப்பு

IPL-1
- Advertisement -

கடந்த ஆண்டு இந்தியாவில் துவங்கிய 14-வது ஐபிஎல் தொடரானது இங்கு அதிகரித்த கொரோனா பரவல் காரணமாக வீரர்களும் பாதிக்கப்பட்டதால் 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் 2-வது கட்டமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த தொடரின் முடிவில் சென்னை அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. அடுத்த ஆண்டு மேலும் இரண்டு அணிகள் புதிதாக இணைக்கப்பட்ட 10 அணிகளுடன் ஐபிஎல் தொடரானது நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

csk 1

- Advertisement -

அதன்படி தற்போது அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய நகரங்களை தலைமையாகக் கொண்ட புதிய அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதால் விரைவில் மெகா ஏலம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதற்கு முன்பாக அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் துவங்கும் தேதியையும், எத்தனை நாட்கள்இந்த தொடர் நடைபெறும் என்பதையும் குறித்த முக்கிய தகவலை ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி அடுத்த ஆண்டிற்கான முதல் போட்டி சென்னையில் நடைபெறும் என்றும் அந்த போட்டி ஏப்ரல் 2ஆம் தேதி துவங்கும் என்ற ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

CSKvsMI

மேலும் இந்த தொடரின் இறுதிப் போட்டியானது ஜூன் 4 அல்லது 5 ஆம் தேதி நடைபெறும் என்றும் 10 அணிகள் பங்கேற்பதால் தொடர்ச்சியாக 60 நாட்களை கடந்து இந்த தொடர் நடைபெற உள்ளது. மேலும் இதற்கான தேதிகள் அனைத்தும் உறுதி செய்யப்பட்டு ஐபிஎல் அணிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ சார்பில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : ஒன்லி ஹலால் தான். மத்ததெல்லாம் நோ நோ நோ. இந்திய வீரர்களுக்கு – பி.சி.சி.ஐ விதித்துள்ள கட்டுப்பாடு

மேலும் இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதவுள்ளதால் முதல் போட்டியே ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த மாதம் முடிவடைந்த மெகா ஏலம் முடிவடைந்த பின்னர் ஐபிஎல் தொடருக்கான தேதிகள் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement