ஒன்லி ஹலால் தான். மத்ததெல்லாம் நோ நோ நோ. இந்திய வீரர்களுக்கு – பி.சி.சி.ஐ விதித்துள்ள கட்டுப்பாடு

BCCI
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3 க்கு 0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. அதனைத்தொடர்ந்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நாளை கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் துவங்க உள்ளது. இரு அணிகளும் சாம்பியன்ஷிப் தொடருக்கு உட்பட்ட இந்த தொடரில் தங்களது வெற்றியை பதிவு செய்தாக வேண்டும் என்ற நிலையில் நாளை பலப்பரீட்சை நடத்த உள்ளன.

இந்நிலையில் இந்த தொடருக்கு முன்பாக தற்போது இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ இந்திய வீரர்களின் உணவு பழக்கவழக்கங்கள் குறித்த டயட் பிளான்-ஐ வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய வீரர்கள் அனைவரும் ஹலால் செய்யப்பட்ட இறைச்சிகளை மட்டுமே இந்த தொடரின் போது எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

மேலும் பன்றி மற்றும் மாட்டு இறைச்சி ஆகியவற்றை எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் அறிவித்துள்ளனர். இந்திய நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய கேள்வி மற்றும் அதிருப்தியை எழுப்பி உள்ளது. ஏனெனில் பன்றி மற்றும் மாட்டு இறைச்சிகளில் தான் கார்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் அதிகம் இருப்பதாலும் கொழுப்புச் சத்து அதில் குறைவு என்பதால் வீரர்கள் இந்த வகையான இறைச்சிகளை தான் அதிகம் எடுத்துக் கொள்வார்கள்.

ஆனால் தற்போது ஹலால் செய்யப்பட்ட இறைச்சிகளை மட்டுமே எடுத்துக்கொள்ளும் வேண்டும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது பெரிய கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் வீரர்களின் தனிப்பட்ட உணவு வழக்கங்களில் பிசிசிஐ தலையிடுவது தவறு என்றும் உணவு டயட் விஷயத்தில் வீரர்களை கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் ரசிகர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

இதையும் படிங்க : நாளைய முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

மேலும் ஹலால் செய்யப்பட்ட உணவு என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிப்பதாக உள்ளதால் இதுபோன்று கட்டளைகளை வீரர்களிடம் திணிக்கக் கூடாது என்றும் தங்களது கருத்துக்களை ரசிகர்கள் முன் வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement