நாளைய முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

IND

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியானது நாளை கான்பூர் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த போட்டிக்கான அணியில் கேப்டன் விராட் கோலி ஓய்வு எடுத்துக் கொண்டதால் முதல் போட்டியில் மட்டும் தற்காலிக கேப்டனாக ரஹானே செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளைய இந்த முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் விளையாடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது.

kohli rahane

அந்தவகையில் நாளைய போட்டிக்கான பிளேயிங் லெவனை நாங்கள் உங்களுக்காக உத்தேசமாக இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி ஏற்கனவே ரோஹித் மற்றும் ராகுல் ஆகியோர் இந்த தொடரில் விளையாடாததன் காரணமாக சுப்மன் கில் மற்றும் மாயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்குவது உறுதியாகியுள்ளது.

- Advertisement -

அதேபோன்று 3-வது இடத்தில் புஜாரா, ஐந்தாவது இடத்தில் ரஹானே ஆகியோர் களம் இறங்குகின்றனர். இதன் காரணமாக நான்காம் இடத்தில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு அறிமுக வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அதே போன்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விருத்திமான் சஹா அல்லது கே.எஸ்.பரத் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு உறுதி.

rahane

பின்னர் 5 பந்துவீச்சாளர்களில் மூன்று ஸ்பின்னர்களாக ஜடேஜா, அஷ்வின் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் விளையாட வாய்ப்பு உள்ளது. இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களாக முகமது சிராஜ் மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் விளையாடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

- Advertisement -

இதையும் படிங்க :

1) சுப்மன் கில், 2) மாயங்க் அகர்வால், 3) புஜாரா, 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) ரஹானே, 6) சஹா (அ) பரத், 7) ரவீந்திர ஜடேஜா, 8) அஷ்வின், 9) அக்சர் படேல், 10) இஷாந்த் சர்மா, 11) முகமது சிராஜ்

Advertisement