சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம்…போலீஸ் அதிரடி கைது…எவ்வளோ பணம் பேட்டிங் தெரியுமா ? – புகைப்படம் உள்ளே

betting

எப்பொழுதெல்லாம் ஐபிஎல் கிரிக்கெட் நடக்கிறதோ அப்போதெல்லாம் சூதாட்டமும் ரகசியமாக நடந்துவருவதும் பலகோடிகள் அதில் புரள்வதும் வாடிக்கையாகிவிட்டது.என்னதான் காவல்துறை சூதாட்டத்தை கட்டுப்படுத்திட பல முயற்சிகளை செய்தாலுமே நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது இந்த சூதாட்டம்.

fixing

சென்னை வண்ணாரப்பேட்டையிலுள்ள ஒரு டீக்கடையில் ஐபிஎல் சூதாட்டம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.கிடைத்த தகவலின் படி காவல்துறையினர் மாறுவேடத்தில் சென்று அங்கு விசாரணை நடத்தியதில் அங்கு சூதாட்டம் நடைபெறுவது உறுதிசெய்யப்பட்டு இருவர் கைதுசெய்யப்பட்டு உள்ளனர்.

- Advertisement -

என்.என்.கார்டனில் உள்ள அந்த டீக்கடையில் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் ஆசைவார்த்தை காட்டி சூதாட அழைத்ததும், 10,000 ரூபாய் கட்டி ஜெயிக்கும் அணியை சரியாக தேர்வுசெய்தால் 20,000 ரூபாயாக திருப்பி தரப்படும் என்றும் ஆசைவார்த்தை காட்டி சூதாட்டம் நடத்தி வந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

dhoni1

பின்னர் கைதுசெய்யப்பட்ட முகமது செரிப் மற்றும் அவரது மகன் சையது அபுதாகீர் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -
Advertisement