- Advertisement -
ஐ.பி.எல்

ஐபிஎல் 2025: 204 இடத்துக்கு மொத்தம் 1574 வீரர்கள் பங்கேற்கும் மெகா ஏலம் நடைபெறும் தேதி, இடங்கள் அறிவிப்பு

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் வீரர்கள் ஏலம் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு மெகா ஏலம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக அனைத்து 10 அணிகளும் தாங்கள் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. இந்நிலையில் 2025 ஐபிஎல் ஏலத்தில் மொத்தம் 1574 வீரர்கள் பங்கேற்க உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

அதில் 320 பேர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய வீரர்கள், 1225 பேர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரர்கள், 30 பேர் துணை உறுப்பு நாடுகளில் இருந்து பங்கேற்க உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய 48 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க உள்ளார்கள். உலகம் முழுவதிலும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய 272 வீரர்களும் பங்கேற்க உள்ளனர்.

- Advertisement -

ஐபிஎல் ஏலம்:

கடந்த வருடங்களில் விளையாடிய 152 சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத இந்திய வீரர்களும் ஏலத்தில் பங்கேற்கின்றனர். 965 சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத புதுமுக இந்திய வீரர்களும் ஏலத்தில் பங்கேற்க உள்ளார்கள். அதே போல உலக அளவில் 104 சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத புதுமுக வீரர்களும் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க உள்ளார்கள்.

வெளிநாடுகளில் அதிகபட்சமாக தென் ஆப்பிரிக்காவில் இருந்து 91 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவில் இருந்து 76 வீரர்கள், இங்கிலாந்தில் இருந்து 52 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். நியூசிலாந்து நாட்டில் இருந்து 39, வெஸ்ட் இண்டீஸிலிருந்து 33, இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து தலா 29 வீரர்கள் பங்கேற்க உள்ளார்கள்.

- Advertisement -

ஏல தேதிகள்:

மேலும் வங்கதேசத்திலிருந்து 13, கனடாவில் இருந்து 4, அயர்லாந்தில் இருந்து 9, நெதர்லாந்தில் இருந்து 12 என மொத்தம் 1574 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க உள்ளார்கள். அவர்கள் பங்கேற்கும் ஏலம் வரும் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவில் இருக்கும் ஜெட்டா நகரில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில் அனைத்து அணிகளாலும் அதிகபட்சமாக 204 வீரர்களை மட்டுமே வாங்க முடியும்.

இதையும் படிங்க: ஆஸி தொடரில் இந்தியா ஜெய்க்கனும்ன்னா ரோஹித், கோலி பேட்டிங்கை இப்படி மாத்துங்க.. டேனிஷ் கனேரியா

அந்த 204 இடங்களுக்கு தான் 1574 வீரர்கள் போட்டியிடுகிறார்கள். ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 25 வீரர்களை வாங்க முடியும். அந்த 204 வீரர்களை வாங்குவதற்கு 10 அணிகளிடமும் 641.5 கோடிகள் கையிருப்பு உள்ளன. இந்த ஏலத்தை ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் தொலை பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -