ஆஸி தொடரில் இந்தியா ஜெய்க்கனும்ன்னா ரோஹித், கோலி பேட்டிங்கை இப்படி மாத்துங்க.. டேனிஷ் கனேரியா

Danish Kaneria
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் 3 – 0 என்ற கணக்கில் வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் கொண்ட பெரிய டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற அத்தொடரில் இந்தியா 4 போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

அந்தத் தொடரிலாவது விராட் கோலி, ரோஹித் சர்மா சிறப்பாக செயல்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஏனெனில் நியூசிலாந்து தொடரில் சுமாராக விளையாடியவர்கள் இந்தியாவின் வரலாற்று தோள்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார்கள். இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடரில் இந்தியா வெற்றி பெறுவதற்கு ரோஹித், விராட் கோலியின் பேட்டிங் வரிசையை மாற்ற வேண்டும் என முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா கூறியுள்ளார்.

- Advertisement -

வித்யாச ஆலோசனை:

குறிப்பாக ரோஹித் சர்மா 3வது இடத்திலும் விராட் கோலி 4வது இடத்திலும் விளையாட வேண்டும் என்று அவர் ஆலோசனை தெரிவித்துள்ளார். அதற்கான காரணம் பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ரோஹித் சர்மாவால் துவக்க வீரராக கச்சிதமாக விளையாட முடிகிறதா அல்லது ஒரு விக்கெட் விழுந்த பின் விளையாடும் வகையில் பேட்டிங் வரிசையை மாற்ற முடியுமா என்பதை பார்க்க வேண்டும்”

“ஏனெனில் இந்தியாவிலேயே ரோகித் சர்மா தடுமாறினார். குறிப்பாக நியூசிலாந்து தொடரில் சௌதீக்கு எதிராக அவர் ஓரிரு முறை அவுட்டானார். ஆஸ்திரேலியாவில் பந்து இன்னும் அதிகமாக நகரும். எனவே ஆஸ்திரேலியாவில் வேகத்துக்கு எதிராக ரோகித் சர்மா அதிகம் அவுட்டாவதை நீங்கள் பார்க்கக்கூடும். எனவே ரோஹித் சர்மா ஒரு விக்கெட் விழுந்த பின் விளையாட வர வேண்டும்”

- Advertisement -

புதிய வரிசை:

“விராட் கோலி 2 விக்கெட்டுகள் விழுந்த பின் வர வேண்டும். இந்திய டாப் ஆர்டரில் ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் துவக்க வீரர்களாக விளையாட வேண்டும். அவர்கள் இதை கையாள வேண்டும். இந்திய அணியில் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரும் உள்ளார்கள். எனவே கௌதம் கம்பீர் அவர்களை பயன்படுத்தி நீண்ட பேட்டிங் வரிசையை உருவாக்க முடியும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: பிசிசிஐ மேல பழி போடாதீங்க.. இந்தியாவை விட பெருசில்லாத ரோஹித், கோலி இதை செஞ்சுருக்கனும்.. சுனில் ஜோசி

இதுவும் கொஞ்சம் சிறந்த ஆலோசனை போல் இருந்தாலும் ஒரு தோல்விக்காக ரோகித் சர்மா, விராட் கோலி தங்களுடைய பழைய இடத்தை மாற்றுவார்களா என்பது சந்தேகமாகும். இருப்பினும் சுப்மன் கில் ஏற்கனவே துவக்க வீரராக ஆஸ்திரேலியாவில் விளையாடி அனுபவம் கொண்டவர். எனவே இந்திய பேட்டிங் வரிசையில் மாற்றங்கள் நிகழுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Advertisement