ஐபிஎல் 2026 ஏலம் நடைபெறும் தேதி, இடத்தை அறிவித்த பிசிசிஐ.. அணிகளின் கையிருப்பு கோடிகள் இதோ

IPL Auction
- Advertisement -

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் கோப்பையை வெல்வதற்கு அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. அதற்காக அனைத்து அணிகளும் தேவையற்ற வீரர்களை விடுவித்து தக்க வைத்த வீரர்களின் பட்டியலை நேற்று வெளியிட்டன. இந்நிலையில் ஐபிஎல் 2026 தொடருக்கான வீரர்கள் ஏலத்தின் விவரங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இம்முறை மினி ஏலம் ஒரு நாள் மட்டுமே நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன் படி ஐபிஎல் 2026 வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 16ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஏலம் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபி நகரில் இருக்கும் இட்டிஹாட் ஏரியானாவில் நடைபெறும் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

- Advertisement -

ஐபிஎல் 2026 ஏலம்:

இதைத் தொடர்ந்து ஒவ்வொரு அணிகளும் எவ்வளவு கையிருப்பு தொகையுடன் ஏலத்தில் பங்கேற்க உள்ளது என்பதைப் பற்றி பார்ப்போம். 3 முறை சாம்பியன் கொல்கத்தா அணி வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரசல் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களை கழற்றி விட்டுள்ளது. அதனால் இந்த வருடம் மற்ற அனைத்து அணிகளை காட்டிலும் கொல்கத்தா அணி அதிகபட்சமாக 64.30 கோடி ரூபாய்களுடன் ஏலத்தில் களமிறங்க உள்ளது.

5 முறை சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் ரவீந்திர ஜடேஜா, சாம் கரண் ஆகியோரை ராஜஸ்தானிடம் கொடுத்து சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் வாங்கியுள்ளது. தீபக் ஹூடா, விஜய் சங்கர், பதிரனா போன்ற வீரர்களை கழற்றி விட்ட அந்த அணி 43.40 கோடிகளுடன் ஏலத்தை சந்திக்க உள்ளது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆடம் ஜாம்பா, முகமது ஷமி, ராகுல் சஹர் போன்றவர்களை கழற்றி விட்டு 25.50 கோடிகளுடன் ஏலத்தை சந்திக்க உள்ளது.

- Advertisement -

கையிருப்பு எவ்வளவு:

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி டேவிட் மில்லர், சஹால், சர்துள் தாகூர், ஆகாஷ் தீப், ரவி பிஸ்னோய், சமர் ஜோசப் போன்ற நட்சத்திர வீரர்களை கழற்றி விட்டதால் கிடைத்த 22.95 கோடிகளுடன் ஏலத்தை சந்திக்க உள்ளது. டு பிளேஸிஸ், ஜேக் பிரேசர், மோஹித் சர்மா போன்றவர்களை கழற்றி விட்ட டெல்லி அணி 21.80 கோடிகளுடன் ஏலத்தை சந்திக்க தயாராகியுள்ளது.

இதையும் படிங்க: 124 சேசிங்கில் 10/2 என இந்தியா திணறல்.. 15 வருடத்துக்கு பின் மோசமான சாதனை துவக்கம்.. சேசிங் செய்யுமா?

நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 16.40 கோடிகளுடன் மினி ஏலத்திற்கு தயாராகியுள்ளது. நிதிஷ் ராணா, தீக்சனா, ஹஸரங்கா போன்ற நட்சத்திர வீரர்களை கழற்றி விட்டுள்ள ராஜஸ்தான் 16.05 கோடிகளுடன் ஏலத்தில் பங்கேற்க உள்ளது. குஜராத் அணி 12.90 கோடிகளுடன் ஏலத்தில் களமிறங்க தயாராகியுள்ளது. மேக்ஸ்வெல், ஜோஸ் இங்லிஷ் போன்ற வீரர்களை கழற்றி விட்ட பஞ்சாப் 11.50 கோடிகளுடன் ஏலத்துக்கு தயாராகியுள்ளது. கடைசியாக மும்பை இந்தியன்ஸ் இருப்பதிலேயே குறைவாக 2.75 கோடிகளுடன் ஏலத்தில் களமிறங்க உள்ளது.

Advertisement