- Advertisement -
ஐ.பி.எல்

ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டி மழையால் கைவிடப்பட்டால் வெற்றியாளர் யார்? ரூல்ஸ் சொல்வது என்ன? – விவரம் இதோ

கடந்த மார்ச் 22-ஆம் தேதி இந்தியாவில் துவங்கிய 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ஜூன் 3-ஆம் தேதியுடன் நிறைவுக்கு வருகிறது. மொத்தம் பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வந்த இந்த தொடரில் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையே அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஜூன் 3-ஆம் தேதி இரவு 7:30 மணிக்கு இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.

இறுதிப்போட்டி மழையால் கைவிடப்பட்டால் என்ன நடக்கும்? :

இதன் காரணமாக தற்போது இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் நரேந்திர மோடி மைதானத்தில் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர். ஏற்கனவே இந்த மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது குவாலிபயர் போட்டி மழை காரணமாக 2.15 மணி நேரம் தாமதமாக துவங்கியது.

- Advertisement -

அதேபோன்று இத்தொடரின் இறுதிப் போட்டியிலும் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் காரணமாக ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது திட்டமிட்டபடி நடைபெறுமா? ஒருவேளை மழை பெய்தால் வெற்றியாளர் யார்? என்பது குறித்த பல்வேறு சந்தேகங்கள் பலரது மத்தியிலும் நிலவி வருகின்றன.

இந்நிலையில் அப்படி இறுதிப்போட்டி மழையால் பாதிக்கபட்டால் விதிமுறை கூறுவது என்ன? என்பது குறித்த விளக்கங்களை இந்த பதிவில் காணலாம். அந்த வகையில் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி மழையால் பாதிக்கப்படும் பட்சத்தில் ஜூன் 4-ஆம் தேதி ரிசர்வ் நாள் அறிவிக்கப்படும்.

- Advertisement -

அந்த நாளிலும் மழையால் போட்டி கைவிடப்பட்டால் லீக் போட்டிகளின் முடிவில் எந்த அணி அதிக புள்ளிகளை பெற்று இருக்கிறதோ அந்த அணியே சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதாக அறிவிக்கப்படும். அந்த வகையில் பார்க்கையில் மழையால் ஆட்டம் கைவிடப்பட்டால் பஞ்சாப் அணி சாம்பியன் என்று அறிவிக்கப்படும் என தெரிகிறது.

இதையும் படிங்க : ஏற்கனவே ஷ்ரேயாஸ் – பட்டிதார் பைனல்ல விளையாடிய போது யார் ஜெயிச்சாங்கனு தெரியுமா? – விவரம் இதோ

இருந்தாலும் இரண்டரை மாதங்களாக நடைபெற்று வரும் இந்த தொடரில் போட்டி முழுவதுமாக நடைபெற்று திறமையான அணி வெற்றிபெற வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -