மகளிர் ஐபிஎல் 2022 : 2 நட்சத்திர வீராங்கனைகள் இல்லை, 3 அணிகள், வீராங்கனைகள், அட்டவணை – முழுவிவரம் இதோ

Women's IPL
- Advertisement -

இந்தியாவில் இருக்கும் பல தரமான இளம் கிரிக்கெட் வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான வாய்ப்பளித்து பட்டை தீட்டி உலக அரங்கில் மிகச்சிறந்த உலகத்தரம் வாய்ந்த வீரர்களாக இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையிலேயே ஐபிஎல் தொடர் கடந்த 2008இல் உருவாக்கப்பட்டது. அந்த வகையில் கடந்த 15 வருடங்களாக நிறைய இளம் வீரர்கள் தங்களது அபார திறமையை வெளிப்படுத்தி உலகத்தரம் வாய்ந்த வீரர்களாக உருவாகி நாளடைவில் இந்தியாவிற்கும் பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தனர்.

IPL

- Advertisement -

பல தரமான வீரர்களை பஞ்சமின்றி கொடுத்துக் கொண்டே வரும் ஐபிஎல் தொடர் உலக கிரிக்கெட் அரங்கில் இந்தியா ஒரு தனித்துவம் வாய்ந்த நம்பர் ஒன் அணியாக திகழ்வதற்கு முக்கிய பங்காற்றி வருகிறது. ஆனால் இந்திய மகளிர் அணி மட்டும் 90களில் இந்திய ஆடவர் அணி எப்படி இருந்ததோ அதே போல் இன்னும் தரத்தில் தரைமட்டத்தில் தான் இருந்து வருகிறது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாட்டு மகளிர் அணியினர் அசால்டாக ஒவ்வொரு வருடமும் உலக கோப்பைகளை வெல்லும் நிலையில் வரலாற்றில் ஒரு முறை கூட இந்திய மகளிரணி ஐசிசி உலக கோப்பையை தொட்டதே கிடையாது என்பதே அதற்கு சிறந்த சாட்சியாகும்.

மகளிர் ஐபிஎல்:
அதேபோல் ஆஸ்திரேலியா போன்ற மகளிர் அணியினர் இந்த அளவுக்கு கொடிகட்டிப் பறப்பதற்கு காரணம் அங்கு ஆடவர் பிக்பேஷ் தொடருக்கு நிகராக மகளிர் பிக் பேஷ் டி20 தொடரும் நடத்தப்பட்டு வருகிறது. சொல்லப்போனால் இந்தியாவிலும் 2018, 2019 போன்ற வருடங்களில் 3 அணிகள் கொண்ட மகளிர் ஐபிஎல் நடைபெற்றாலும் அது பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பதால் கிடப்பில் போடப்பட்டது.

Women's IND

அதற்கு பலனாக சமீபத்தில் நியூசிலாந்து நாட்டில் நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கோப்பையில் இந்தியா லீக் சுற்றுடன் வெளியேறியது. எனவே அதல பாதாளத்தில் திண்டாடும் இந்திய மகளிர் கிரிக்கெட்டை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றி முதல் உலகக்கோப்பையை முத்தமிட வேண்டுமெனில் மகளிர் ஐபிஎல் தொடரை மீண்டும் நடத்தியே தீர வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்தது.

- Advertisement -

அதை ஏற்ற பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி 2023 முதல் முழு மகளிர் ஐபிஎல் தொடர் நடைபெறும் எனவும் அதற்கு முன்னோட்டமாக இப்போது 3 அணிகள் பங்குபெறும் மகளிர் டி20 சேலஞ்ச் தொடர் ஆடவர் ஐபிஎல் 2022 தொடரின் இறுதியில் நடைபெறும் எனவும் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பின்படி மகளிர் டி20 சேலஞ்ச் கோப்பை தொடர் வரும் மே 23 முதல் 28 வரை புனே நகரில் நடைபெற உள்ளது.

Women's IPL

3 அணிகள் அட்டவணை:
இதில் ஏற்கனவே விளையாடிய ட்ரெயில் ப்ளேசர்ஸ், சூப்பர்நோவாஸ், வேலோசிட்டி ஆகிய 3 அணிகள் இம்முறை மீண்டும் விளையாடுகிறது. இருப்பினும் கடந்த முறை இருந்த அனுபவ வீராங்கனைகள் மிதாலி ராஜ் மற்றும் ஜூலன் கோஸ்வாமி ஆகியோர் இம்முறை பங்கேற்கவில்லை. எனவே இந்த தொடரில் நட்சத்திர இந்திய வீராங்கனைகள் ஹர்மன்பிரீத், கவுர், ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா ஆகிய மூவரும் கேப்டனாக செயல்பட உள்ளனர்.

- Advertisement -

இந்த தொடரில் ஒவ்வொரு அணியிலும் 16 வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா வெஸ்ட் இண்டீஸ் ஆகிய வெளிநாடுகளில் இருந்தும் குறிப்பிட்ட சில நட்சத்திர வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த வீராங்கனைகளை இந்திய மகளிர் தேர்வு குழுவினர் தேர்வு செய்துள்ளனர். இந்த 3 அணிகளும் லீக் சுற்றில் தலா 1 போட்டிகளில் பங்கேற்று அதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன.

மகளிர் டி20 சேலஞ் அட்டவணை:
மே 23 : ட்ரைல் ப்ளேசர்ஸ் V சூப்பர்நோவாஸ், புனே
மே 24 : சூப்பர்நோவாஸ் V வேலோசிட்டி, புனே
மே 26 : வேலோசிட்டி V ட்ரைல் ப்ளேசர்ஸ், புனே
மே 28 : பைனல், புனே.

- Advertisement -

3 அணிகளின் விவரம் இதோ:
1. சூப்பர்நோவாஸ்: ஹர்மன்ப்ரீட் கௌர் (கேப்டன்), தானியா பாட்டியா, அலனா கிங், ஆயுஷி சோனி, சந்து வி, டீன்ரா டோட்டின், ஹர்லீன் தியோல், மேக்னா சிங், மோனிகா படேல், முஸ்கான் மாலிக், பூஜா வஸ்திரக்கர், பிரியா புனியா, ராசி கனோஜியா, சோபி எக்லெஸ்டன், சுனி லுஸ், மான்சி ஜோஷி

ட்ரைல்ப்ளேசர்ஸ்: ஸ்ம்ரிதி மந்தனா (கேப்டன்), பூனம் யாதவ், அருந்ததி ரெட்டி, ஹாய்லே மேத்தியூஸ், ஜெமிமா ரொட்ரிகோஸ், பிரியங்கா பிரியதர்ஷினி, ராஜேஸ்வரி கைக்வாட், ரேணுகா சிங், ரிச்சா கோஷ், எஸ் மேகனா, ஷைக் இஷாயிக், சல்மா காட்டுன், ஷர்மின் அஃதர், சோபியா டன்லி பிரவுன், சுஜாதா மல்லிகா, எஸ்பி போகார்கர்

இதையும் படிங்க : அணிக்குள் மோதலா? அம்பத்தி ராயுடு ஓய்வு அறிவிப்பு பற்றி – சி.எஸ்.கே கோச் பிளெமிங் கூறியது இதோ

வேலோசிட்டி: தீப்தி சர்மா (கேப்டன்), ஸ்னே ராணா ஷபாலி வர்மா, அயபோன்கா காகா, கேபி நவகிர், காத்ரின் கிராஸ், கீர்த்தி ஜேம்ஸ், லாரா ஒள்வார்டட், மாயா சோனவனே, நட்தக்கன் சான்டம், ராதா யாதவ், ஆர்த்தி கேதார், ஷிவாலி ஷிண்டே, சிம்ரன் பகதூர், யஸ்டிக்கா பாட்டியா, பிரணவி சந்திரா

Advertisement