மழையின் அச்சுறுத்தலில் ஐபிஎல் 2022 பிளே ஆஃப் சுற்று ரத்து செய்யப்பட்டால் வெற்றியாளர் யார்? – விதிமுறை என்ன?

Rain
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் டி20 தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாக மும்பை நகரில் துவங்கியது. இம்முறை லக்னோ, குஜராத் ஆகிய புதிய அணிகளை சேர்த்து 10 அணிகள் பங்குபெறும் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட தொடராக நடைபெற்று வரும் இந்த தொடரில் 69 போட்டிகளின் முடிவில் நாக் அவுட் சுற்றில் விளையாடப்போகும் 4 அணிகள் யார் யார் என்பது தெரிந்துவிட்டன. இந்த தொடரில் நிறைய கோப்பைகளை வென்ற வெற்றிகரமான ஐபிஎல் அணிகள் என பெயரெடுத்த மும்பையும் சென்னையும் ஆரம்பத்திலேயே பெற்ற தொடர் தோல்விகளால் சுற்று வாய்ப்பை இழந்தன.

MI vs CSK Ms Dhoni Rohit Sharma

- Advertisement -

அதிலும் 5 கோப்பைகளை வென்ற வெற்றிகரமான ஐபிஎல் அணியாக சாதனை படைத்த மும்பை வரலாற்றிலேயே முதல் அணியாக 8 போட்டிகளில் தோல்வியடைந்து முதல் அணியாக வெளியேறியது. மேலும் மொத்தமாக பங்கேற்ற 14 போட்டிகளில் வரலாற்றில் முதல் முறையாக 10 தோல்விகளை சந்தித்த அந்த அணி முதல் முறையாக புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது.

டாப் 4 அணிகள்:
அதேபோல் 4 கோப்பைகளை வென்று வெற்றிகரமான 2-வது ஐபிஎல் அணியாக சாதனை படைத்த சென்னை நடப்புச் சாம்பியன் என்ற அந்தஸ்துடன் விளையாடிய போதிலும் தேவையற்ற கேப்டன்ஷிப் மாற்றம், தீபக் சாஹர் போன்ற வீரர்கள் காயத்தால் விலகியது போன்ற அம்சங்களால் 14 போட்டிகளில் வரலாற்றில் முதல் முறையாக 10 தோல்விகளை சந்தித்து 2020க்கு பின் 2-வது முறையாக ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியது. மேலும் கொல்கத்தா, பஞ்சாப், ஐதராபாத் ஆகிய அணிகளும் ஆரம்பம் முதலே தடுமாறி தேவையான வெற்றிகளை பதிவு செய்யத் தவறியதால் 6, 7, 8 ஆகிய இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்தது.

LSG vs GT Preview

மறுபுறம் புதிய அணிகளாக களமிறங்கிய குஜராத் மற்றும் லக்னோ ஆரம்பம் முதலே தேவையான வெற்றிகளால் டாப் இடங்களில் ஜொலித்தன. அதிலும் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத ஹர்திக் பாண்டியா தலைமையில் அசத்தலாக செயல்பட்ட குஜராத் 14 போட்டிகளில் 10 வெற்றிகளை பதிவு செய்து முதலிடம் பிடித்து முதல் அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அதேபோல் சஞ்சு சாம்சன் தலைமையிலான வரலாற்றின் முதல் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் 14 போட்டிகளில் 9 வெற்றிகளை பதிவு செய்து 2-வது இடம் பிடித்தது.

- Advertisement -

பிளே ஆஃப் சுற்று:
குஜராத் போலவே கேஎல் ராகுல் தலைமையில் புதிதாக களமிறங்கிய லக்னோவும் ராஜஸ்தான் போல 9 வெற்றிகளை பதிவு செய்தாலும் சற்று குறைவான ரன்ரேட் பெற்றதால் 3-வது இடம் பிடித்தது. இறுதியில் 5-வது இடத்திற்கு பெங்களூர் மற்றும் டெல்லி ஆகிய அணிகளிடம் கடும் போட்டி நிலவிய சமயத்தில் 10-வது இடத்தை பிடித்த மும்பைக்கு எதிரான தனது கடைசி லீக் போட்டியில் தோல்வியடைந்த டெல்லி பிளே ஆஃப் வாய்ப்பை கோட்டை விட்டது. அதனால் அதிர்ஷ்டம் மற்றும் மும்பையில் மாபெரும் உதவியால் 4-வது அணியாக பெங்களூரு நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது.

Hardik Pandya GT Vs RR 2.jpeg

இதை தொடர்ந்து பைனலில் விளையாடி சாம்பியனாக போகும் அணியை தீர்மானிக்கப்போகும் முக்கியமான பிளே ஆஃப் சுற்று மே 24 – 27 வரை கொல்கத்தா மற்றும் அகமதாபாத் ஆகிய நகரில் நடைபெறுகிறது. அந்த விவரம் இதோ:

- Advertisement -

குஜராத் V ராஜஸ்தான், குவலிபயர் 1, இரவு 7.30, கொல்கத்தா.

லக்னோ V பெங்களூரு, எலிமினேட்டர், இரவு 7.30, கொல்கத்தா.

- Advertisement -

குவலிபயர் 1 தோல்வியாளர் V எலிமினேட்டர் வெற்றியாளர், குவலிபயர் 2, இரவு 7.30 மணி, அஹமதாபாத்.

Rain

மழை அச்சுறுத்தல்:
இதில் குவலிபயர் 1, எலிமினேட்ட்டர் போட்டிகள் உலகப் புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. ஆனால் இந்த 2 போட்டிகள் நடைபெறும் கொல்கத்தாவில் மே 24, 25 ஆகிய நாட்களில் மழைக்கான வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது. அதிலும் மே 24-ஆம் தேதியன்று கொல்கத்தாவில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. மே 25-ஆம் தேதியும் மிதமானது முதல் அதிகமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதுபோன்ற சமயங்களில் முடிந்த அளவு ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டியின் முடிவை காண்பதற்கு அம்பயர்கள் முயற்சிப்பார்கள்.

1. ஒருவேளை ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி மழையால் ரத்து செய்யப்படும் பட்சத்தில் புள்ளி பட்டியலில் டாப் இடங்களை பிடித்த அணிகள் அடுத்த போட்டிக்கு தகுதி பெரும். எடுத்துக்காட்டாக குவாலிபயர் 1 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டால் குஜராத் நேரடியாக பைனலுக்கு தகுதி பெறும். ராஜஸ்தான் தோல்வி அடைந்ததாக கருதி குவலிபயர் 2 போட்டிக்கு அனுப்பப்படும்.

இதையும் படிங்க : அன்றும் இன்றும் முக்கிய நேரத்தில் தவறு செய்த பண்ட் ! இதுக்கு கேப்டனா அவரே இருந்திருக்கலாம்

2. அதேபோல் எலிமினேட்டர் போட்டி ரத்து செய்யப்பட்டால் 3-வது இடம் பிடித்த லக்னோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு குவாலிபயர் 2 போட்டிக்கு அனுப்பப்படும்.

Advertisement