ஐபிஎல் 2022 முழுக்க மேட்ச் பிக்சிங், குஜராத்தின் வெற்றி முன்னரே முடியுசெய்யப்பட்டது, விசாரணை தேவை – புயலை கிளப்பும் நட்சத்திரம்

Jay-shah
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் 10 அணிகள் களமிறங்கியதால் கோப்பையை வெல்வதற்கு கடந்த சீசன்களை விட இருமடங்கு போட்டி காணப்பட்ட நிலையில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் அசத்திய குஜராத் டைட்டன்ஸ் தனது முதல் வருடத்திலேயே கோப்பையை வென்றது அனைவருக்கும் மிகப்பெரிய ஆச்சரியமாக அமைந்தது. ஏனெனில் எம்எஸ் தோனி, ரோகித் சர்மா போன்ற ஜாம்பவான்கள் கேப்டன் தலைமையில் வெற்றிகரமான ஐபிஎல் அணிகளாக சாதனை படைத்த மும்பை, சென்னை ஆகிய அணிகள் ஆரம்பத்திலேயே தொடர் தோல்விகளை சந்தித்து நாக்-அவுட் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது.

ஆனால் நேற்று முளைத்த காளானாக இந்த வருடம் முதல் முறையாக தோற்றுவிக்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் அதுவும் உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவம் இல்லாத ஹர்திக் பாண்டியா தலைமையில் லீக் சுற்றில் சக்கை போடு போட்டு 14 போட்டிகளில் 10 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து முதல் அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அதோடு நிற்காமல் நாக்-அவுட் சுற்றில் குவாலிபயர் 1 போட்டியில் கொஞ்சம் கூட தடுமாறாமல் ராஜஸ்தானை தோற்கடித்து நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

- Advertisement -

குஜராத் மண்ணில்:
அதை தொடர்ந்து கடந்த மே 29-ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் ராஜஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த குஜராத் அபார வெற்றி பெற்றது. அதன் காரணமாக தனது முதல் வருடத்திலேயே அதுவும் சொந்த மண்ணில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சொந்த ரசிகர்கள் முன்னிலையில் கோப்பையை முத்தமிட்ட குஜராத் சாதனை படைத்தது. இந்த முதல் வருடத்திலேயே 2 மாதத்திற்குள் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத ஹர்திக் பாண்டியா தலைமையில் குறைவான நட்சத்திர வீரர்களுடன் நிறைய அனுபவம் இல்லாத இளம் வீரர்களை வைத்து குஜராத் கோப்பையை வென்று காட்டியுள்ளது பலரின் பாராட்டுக்களைப் பெற்றது.

1. அதே சமயம் இந்த வெற்றி என்பது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது என்று சமூக வலைதளங்களில் பெரும்பாலான ரசிகர்கள் தற்போதும் கூட பேசி வருகிறார்கள்.

- Advertisement -

2. அதுவும் குஜராத் அணி குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் இறுதிப் போட்டியில் நிச்சயம் வெல்லும் என்று மே 28-ஆம் தேதியே சமூக வலைதளங்களில் கூறிய ரசிகர்கள் இது பிக்சிங் செய்யப்பட்டது என்று தெரிவித்தனர்.

3. அதற்கு காரணம் பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி இருந்தாலும் பெரும்பாலான முடிவுகளை செயலாளராக இருக்கும் ஜெய் ஷா தான் எடுக்கிறார். அவர் அரசியல் கட்சியான பாஜகவின் மூத்த தலைவரும் இந்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவின் மகன் என்று அனைவரும் அறிவோம்.

- Advertisement -

4. அப்படிப்பட்ட நிலையில் அவரின் அதிகாரத்தில் இந்த ஐபிஎல் தொடர் பிக்சிங் செய்யப்பட்டதாக அரசல் புரசலாக பல ரசிகர்கள் பேசுகின்றனர். ஏனெனில் வரும் டிசம்பரில் குஜராத் மாநிலத்தில் தேர்தல் வர உள்ளதால் இப்போதே குஜராத் ஐபிஎல் அணி அதுவும் சொந்த மண்ணில் அதுவும் நரேந்திர மோடி என பெயரிடப்பட்டுள்ள மைதானத்தில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் கோப்பையை வென்றால் அது மக்களை கவரும் வகையில் அமையும் என்பதே அதற்குக் காரணமாகும்.

5. அதுபோல் மேலும் சில காரணங்களையும் மே 28-ஆம் தேதியன்றே ரசிகர்கள் முன் வைத்தனர். அதற்கேற்றார் போல் அடுத்த நாள் இரவு குஜராத் கோப்பையை வென்றது.

- Advertisement -

6. மேலும் இந்த வருட ஐபிஎல் தொடரில் பெரும்பாலான போட்டிகளில் டாஸ் வென்று சேசிங் செய்தால் வெற்றி எளிதாக கிடைத்து விடும் என்ற சூழ்நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து 20 ஓவர்களில் வெறும் 130/9 ரன்களை மட்டுமே எடுத்தது ரசிகர்களின் அந்த கருத்துகளை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்தது.

7. அத்துடன் இந்த வருடம் முழுவதும் ரன் மழை பொழிந்து வந்த ஜோஸ் பட்லர் இறுதிப் போட்டியில் பாண்டியா வீசிய ஒரு சுமாரான பந்தில் ஆட்டமிழந்தது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதைவிட அப்போட்டியை பார்க்க அமித் ஷா அரசு வேலைகளை விட்டுவிட்டு நேராக வந்திருந்தார். அந்த வெற்றியை உலகக்கோப்பையை வென்றது அந்த அணியினர் ஊர்வலமாக கொண்டாடினர். எனவே இது முழுக்க முழுக்க பிக்சிங் என்று பல ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கலாய்த்தனர்.

முழு பிக்சிங்:
இந்நிலையில் ஐபிஎல் 2022 தொடரின் வெற்றி முன்கூட்டியே தீர்மானிக்கப் பட்டது என்பதால் அதை விசாரிக்க வேண்டுமென்று பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி புயலைக் கிளப்பியுள்ளார். ஆனால் அமித் ஷா, ஜெய் ஷா ஆகியோர் இந்திய கிரிக்கெட்டில் நிகழ்த்தும் சர்வாதிகாரத்திற்கு எதிராக பாஜக ஆளும் மத்திய அரசு அதைச் செய்யாது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுபற்றி ட்விட்டரில் அவர் பேசியுள்ளது பின்வருமாறு. “நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் முடிவுகள் முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டதாக புலனாய்வு அமைப்புகள் உணர்கின்றன. எனவே இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும். இதற்காக பொதுநல வழக்கு தேவைப்படுகிறது. ஏனெனில் அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா பிசிசிஐயின் சர்வாதிகாரியாக இருப்பதால் இதனை மத்திய அரசு விசாரிக்க முன்வராது” என்று கூறினார். ஒரு கிரிக்கெட் ரசிகரான சுப்பிரமணியசுவாமி பாஜகவை சேர்ந்தவர் என்றாலும் உண்மைக்கு ஆதரவாக அந்தக் கட்சிக்கு எதிராக பலமுறை இதுபோல் பேசியுள்ளார். அப்படிப்பட்ட அவர் ஐபிஎல் பிக்ஸிங் என்ற பேசியுள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement