கடைசி போட்டியில் ஹைதராபாத்துக்கு எதிராக வெடித்து சிதறிய பஞ்சாப் – வெறித்தனமான ஆட்டம் (நடந்தது என்ன?)

Liam Livinstone Six 2
- Advertisement -

கடந்த மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாகத் தொடங்கிய ஐபிஎல் 2022 தொடரின் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றில் 69 போட்டிகளின் முடிவில் குஜராத் ராஜஸ்தான், லக்னோ மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன. எனவே மே 22-ஆம் தேதி நடைபெற்ற கடைசி சம்பிரதாய போட்டியில் ஏற்கனவே பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை கோட்டைவிட்ட சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் ஆறுதல் வெற்றிக்காக மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் கேன் வில்லியம்சன் தாயகம் திரும்பியதால் புவனேஸ்வர் குமார் தலைமை வகித்த ஹைதராபாத் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு பிரியம் கார்க் 4 (7) ரன்களில் அவுட்டானர்.

Nathan Ellis

- Advertisement -

அதன்பின் களமிறங்கி 9-வது ஓவர் வரை தாக்குப் பிடித்த ராகுல் திரிபாதி 20 (18) ரன்களில் அவுட்டாகி சென்ற நிலையில் அடுத்த சில ஓவர்களில் 5 பவுண்டரி 2 சிக்சருடன் 43 (32) ரன்கள் எடுத்து அதிரடி காட்டிக்கொண்டிருந்த மற்றொரு இளம் தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவும் ஆட்டமிழந்தார். அந்த சமயத்தில் வந்த நிக்கோலஸ் பூரன் 5 (10) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய நிலைமையில் அதிரடி காட்ட வேண்டிய ஐடன் மார்க்கமும் பஞ்சாப்பின் தரமான பந்து வீச்சில் 21 (17) ரன்களில் நடையை கட்டினார்.

இலக்கு 158:
அதனால் 96/5 என சரிந்த அந்த அணி 150 ரன்களை தாண்டுமா என எதிர்பார்க்கப்பட்ட போது தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 25 (19) ரன்களும் ரோமாரியா ஷெப்பர்ட் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 25* (16) ரன்களும் எடுத்து ஒரளவு காப்பாற்றியதால் தப்பிய ஹைதராபாத் 20 ஓவர்களில் 157/8 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் சார்பில் அட்டகாசமாக பந்து வீசிய இளம் இந்திய சுழல் பந்துவீச்சாளர் ஹர்ப்ரீட் ப்ரார் மற்றும் ஆஸ்திரேலியா சுழல்பந்து வீச்சாளர் நாதன் எலிஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

Liam Livingstone

அதை தொடர்ந்து 158 என்ற இலக்கை துரத்திய பஞ்சாப்புக்கு 5 பவுண்டரிகளை பறக்கவிட்ட தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ 23 (15) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த தமிழக வீரர் சாருக்கான் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 19 (10) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். அந்த சமயத்தில் களமிறங்கிய கேப்டன் மயங்க் அகர்வால் 1 (4) ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். மறுபுறம் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்திய மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவான் தனது பங்கிற்கு 2 பவுண்டரி 2 சிக்சர்கள் பறக்கவிட்டு 39 (32) ரன்களில் நடையை கட்டினார்.

- Advertisement -

வெடித்த லிவிங்ஸ்டன்:
இருப்பினும் மயங்க் அகர்வால் அவுட்டானதும் 71/3 என்ற நிலையில் களமிறங்கிய இங்கிலாந்தின் அதிரடி வீரர் லியாம் லிவிங்ஸ்டன் சீக்கிரமே வீட்டுக்குப் போகலாம் என்ற எண்ணத்தில் அதிரடியான சிக்சர்களை பறக்கவிட இடையில் ஜிதேஷ் சர்மா 3 பவுண்டரி 1 சிக்சருடன் 19 (7) ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் பொறுமை இழந்து எரிமலையாக வெடித்த லிவிங்ஸ்டன் 2 பவுண்டரி 5 சிக்சருடன் பறக்கவிட்டு 49* (22) ரன்கள் எடுத்து மிரட்டல் பினிஷிங் கொடுத்ததால் 15.1 ஓவரிலேயே 160/5 ரன்கள் எடுத்த பஞ்சாப் 29 பந்துகள் மீதம் வைத்து அரை மணி நேரம் முன்பாகவே ஆட்டத்தை முடித்து ஆறுதல் வெற்றி பெற்றது.

pbks 1

இந்த வெற்றியால் பங்கேற்ற 14 போட்டிகளில் 7-வது வெற்றியை பதிவு செய்த அந்த அணி புள்ளிப் பட்டியலில் 6-வது இடத்துக்கு முன்னேறி நிமிர்ந்த தலையுடன் வெற்றியுடன் இந்த வருடம் ஐபிஎல் தொடரை முடித்தது. மறுபுறம் பேட்டிங்கில் தட்டுத்தடுமாறி 160 ரன்களைக் கூட எடுக்காத ஹைதராபாத் பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளை எடுத்தாலும் அந்த அணியின் பெரும்பாலான பவுலர்கள் 9க்கும் மேற்பட்ட எக்கனாமியால் ரன்களை வாரி வழங்கினர். அதனால் பங்கேற்ற 14 போட்டிகளில் 8-வது தோல்வியை பதிவு செய்த அந்த அணி புள்ளி பட்டியலில் 8-வது இடத்திற்கு பின்தங்கி தோல்வியுடன் இந்த வருடத்தை நிறைவு செய்தது.

இதை அடுத்து கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக ஒவ்வொரு நாட்களும் த்ரில்லான போட்டிகளை ரசிகர்களுக்கு விருந்து படைத்த இந்த வருட ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டத்தை தீர்மானிக்கப்போகும் ப்ளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் நாளை மறுநாள் அதாவது மே 24-ஆம் தேதி துவங்குகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் குவாலிபயர் 1 போட்டியில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள்  மோதுகின்றன.

Advertisement