ஐபிஎல் தொடரில் சரிந்தாலும் இங்கிலாந்தில் பார்முக்கு வருவேன் – தெம்பாக பேசும் இளம் இந்திய வீரர்

Siraj
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் புதிய கேப்டன் டுப்லஸ்ஸிஸ் தலைமையில் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு லீக் சுற்றில் அசத்தினாலும் நாக் அவுட் சுற்றில் தோல்வியடைந்தது. அதனால் முதல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற அந்த அணியின் 15 வருட கனவு மீண்டும் கனவாகவே போனது. பொதுவாகவே மோசமான பந்து வீச்சுக்கு பெயர்போன பெங்களூரு அணியில் குறிப்பாக வேகப்பந்து வீச்சு துறையில் இந்த வருடம் ஜோஸ் ஹேசல்வுட், ஹர்ஷல் படேல் மிகச் சிறப்பாக பந்துவீசி பலமாக இருந்தனர்.

Mohammed Siraj De Kock

- Advertisement -

ஆனால் அவர்களுக்கு 3-வது பவுலராக கைகொடுக்க வேண்டிய இந்திய வீரர் முகமது சிராஜ் மோசமாக பந்து வீசியது அந்த இருவரின் போராட்டத்தையும் வீணடித்தது. அதிலும் இந்த வருடம் பங்கேற்ற 15 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்த அவர் 10.08 என்ற மோசமான எக்கனாமியில் ரன்களை வாரி வழங்கினார்.

சொதப்பிய சிராஜ்:
கடந்த 2017 முதல் பெங்களூர் அணியில் விளையாடி வரும் அவர் 2019 வரை 9.21, 8.95, 9.55, 8.68 என மோசமான எக்கனாமியில் பந்துவீசி ரன்களை வாரி வழங்கும் வள்ளலாக இருந்தார். அதன் காரணமாக அசோக் திண்டா அகடமியின் கடைசி வாரிசு என்று கடும் விமர்சனத்திற்கு உள்ளான அவருக்கு அப்போதைய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து ஆதரவளித்தார். அதைப் பயன்படுத்தி கடினமாக உழைத்த அவர் ஒரு வழியாக கடந்த 2021 சீசனில் 15 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை எடுத்து 6.78 என்ற அட்டகாசமான எக்கனாமியில் பந்து வீசினார்.

GT vs RCB Siraj Miller Rahul Tewatia

அதனாலேயே சமீப காலங்களில் இந்திய அணியில் முதன்மை பவுலராக உருவெடுத்த அவர் குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோரை புறம்தள்ளி ஷமி, பும்ராவுடன் 3-வது பவுலராக ஜோடி சேர்ந்தார். அதன் காரணமாகத்தான் ஊதா தொப்பியை வென்ற ஹர்ஷல் பட்டேலை கூட தக்க வைக்காத அந்த அணி நிர்வாகம் இவரை 7 கோடி என்ற பெரிய தொகைக்கு இந்த வருடம் நம்பி தக்க வைத்தது. ஆனால் அதற்கு ஏற்றார்போல் செயல்படாத அவர் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியதால் ஆத்திரமடைந்த பல பெங்களூரு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரை கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர்.

- Advertisement -

பார்முக்கு வருவேன்:
இருப்பினும் அதற்கெல்லாம் மனமுடையாத அவர் விரைவில் மீண்டும் கடினமாக உழைத்து இந்தியாவுக்காக அடுத்ததாக வரும் ஜூலை 1ஆம் தேதி இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் போது பார்முக்கு திரும்புவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்த ஐபிஎல் சீசன் எனக்கு சறுக்கியது. கடந்த 2 வருடங்களாக உயர்ந்து சென்ற எனது செயல்பாடுகள் இந்த வருடம் சரிந்து விட்டது. ஆனால் கடந்த 2 வருடங்களில் நான் என்ன செய்தேனோ அதை கையில் எடுத்துள்ளேன். இந்த வருடம் எனக்கு கடினமாக இருந்தது. ஆனாலும் இதிலிருந்து மீண்டு வருவதற்கு கடினமாக உழைக்க தொடங்கியுள்ளேன். என்னுடைய திறமையில் உழைக்கும் நான் என்னுடைய பலத்தை நம்புகிறேன். அந்த டெஸ்ட் போட்டிக்காக இப்போதே பயிற்சிகளை தொடங்கிவிட்டேன். இங்கிலாந்து கால சூழ்நிலைகளில் டுக்ஸ் பந்துகளை உபயோக படுத்தி பந்து வீசுவது எப்போதும் பவுலர்களுக்கு உதவியாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

Siraj

கடந்த வருடம் விராட் கோலி தலைமையில் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அற்புதமாக பந்துவீசிய சிராஜ் 4 போட்டிகளின் முடிவில் 2 – 1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிப்பதற்கு ஷமி, பும்ரா ஆகியோருக்கு ஈடாக பந்து வீசினார். அந்த வகையில் ஜூலை மாதம் பர்மிங்காமில் நடைபெறும் அந்த தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் மிகச் சிறப்பாக பந்துவீசி தனது தன்னம்பிக்கையும் பார்மையும் மீட்டெடுப்பதற்கு இப்போதே பயிற்சி செய்யத் துவங்கியுள்ளதாக அவர் தெம்பாக பேசியுள்ளார்.

ஐபில் என்பது தனியார் தொடர் என்ற நிலையில் அதில் சுமாராக செயல்பட்டாலும் நாட்டுக்காக அதுவும் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்படுவதே உண்மையான திறமையாகும். அந்த வகையில் இந்தியாவுக்காக விளையாடும்போது சிறப்பாக செயல்பட்டு பார்முக்கு திரும்புவேன் என்று நம்பும் சிராஜ் நிச்சயம் அதில் வெற்றி அடைவர் என்று நம்பலாம்.

siraj

இதுபற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “2 – 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் எங்களுக்கு அந்த டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியமானதாகும். அந்தப் போட்டி ரத்து செய்யப்படாமல் மீண்டும் நடைபெறுவது மிகவும் நல்லது. அதில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. டெஸ்ட் போட்டிகளில் ஒரே லைன் லென்த்தில் தொடர்ச்சியாக துல்லியமாக பந்து வீச வேண்டும். அதைத்தான் ஆஸ்திரேலியாவிலும் நான் கற்றுக்கொண்டேன். என்னால் விக்கெட்டை எடுக்க முடியவில்லை என்றால் கூட சிறப்பாக பந்துவீசி எதிரணிக்கு அழுத்தத்தைக் கொடுக்க முயற்சிப்பேன்” என்று பேசினார்.

Advertisement