மெல்போர்னை மிஞ்சிய ரசிக கூட்டம் ! ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஐபிஎல் 2022 படைத்த உலகசாதனை

Narendra Modi Stadium Ahamedabad
- Advertisement -

உலகின் நம்பர் ஒன் டி20 தொடராக கருதப்படும் ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாக மும்பை வான்கடே மைதானத்தில் துவங்கியது. இந்த வருடம் குஜராத் மற்றும் லக்னோ ஆகிய புதிய அணிகளையும் சேர்த்து 10 அணிகள் பங்கேற்ற 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் கடந்த 65 நாட்களாக ரசிகர்களை மகிழ்வித்து வந்தது. அதில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றுகளை கடந்த குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. அதை தொடர்ந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இருக்கும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் மே 29-ஆம் தேதியான நேற்று இறுதிப்போட்டி நடைபெற்றது.

அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் தைரியமாக பேட்டிங் செய்வதாக அறிவித்தாலும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சுமாராக செயல்பட்டு 130/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு ஜெய்ஸ்வால் 22 (16) கேப்டன் சஞ்சு சாம்சன் 14 (11) சிம்ரோன் ஹெட்மையர் 11 (12) என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 39 (35) ரன்கள் எடுத்தார். அந்த அளவுக்கு பந்துவீச்சில் ராஜஸ்தானை மடக்கிப் பிடித்த குஜராத் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

குஜராத் சாம்பியன்:
அதை தொடர்ந்து 131 என்ற சுலபமான இலக்கை துரத்திய குஜராத் 18.1 ஓவர்களில் 133/3 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரித்திமான் சாஹா 5 (7) மேத்தியூ வேட் 8 (10) ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானதால் 23/2 என தடுமாறி அந்த அணிக்கு அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா 34 (30) ரன்கள் எடுத்து மேலும் சரிய விடாமல் வெற்றியை உறுதி செய்து அவுட்டானார். மறுபுறம் நங்கூரமாக நின்ற மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் கடைசி வரை அவுட்டாகாமல் 45* (43) ரன்கள் எடுக்க அவருடன் கடைசி நேரத்தில் மிரட்டிய டேவிட் மில்லர் 32* (19) ரன்கள் எடுத்து மிரட்டல் பினிஷிங் கொடுத்தார்.

அதனால் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத ஹர்திக் பாண்டியா தலைமையில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் சொல்லி அடித்தது போலவே இறுதிப் போட்டியிலும் அபார வெற்றி பெற்ற குஜராத் தனது முதல் வருடத்திலேயே அதுவும் சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் சாம்பியன் பட்டம் வென்று சரித்திரம் படைத்தது. மறுபுறம் பேட்டிங்கில் சொதப்பிய ராஜஸ்தான் 2008 க்குப் பின் 2-வது முறையாக கோப்பையை வெல்லும் பொன்னான வாய்ப்பை நழுவ விட்டது.

- Advertisement -

1 லட்சம் ரசிகர்கள்:
முன்னதாக இந்த போட்டி புதிதாக கட்டப்பட்டுள்ள அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் 1 லட்சம் ரசிகர்களுக்கு முன்னிலையில் திருவிழாவைப் போல நடைபெற்றது. மேலும் ஏஆர் ரகுமான், ரன்பீர் கபூர் போன்ற நட்சத்திரங்கள் பங்கேற்ற நிறைவு விழாவும் இந்த மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. குறிப்பாக ஏஆர் ரகுமான் தனது காந்தக் குரலில் வந்தே மாதரம் பாடலைப் பாடியபோது மைதானத்தில் குழுமியிருந்த ஒரு லட்சம் ரசிகர்கள் சேர்ந்து பாடியதால் ஏற்பட்ட முழக்கம் அனைவரையும் புல்லரிக்க வைத்தது.

மேலும் இன்று நம்பர் ஒன் தொடராக உருவெடுத்துள்ள ஐபிஎல் 15 வருடங்களை தொட்டுள்ளதை கொண்டாடும் வகையில் 66 மீட்டர் நீளம் 42 மீட்டர் அகலம் கொண்ட பிரம்மாண்ட செய்தியை வெளியிட்ட பிசிசிஐ உலகிலேயே மிகப்பெரிய ஜெர்சியை வெளியிட்டு கின்னஸ் சாதனை படைத்தது. அதேபோல் போட்டி துவங்குவதற்கு முன்பாக தேசிய கீதம் வாசிக்கப்பட்ட போது அத்தனை பேரும் எழுந்து நின்று பாடி தேசப்பற்றை வெளிப்படுத்தினார்கள்.

- Advertisement -

அத்துடன் போட்டியின் இடையில் மின் விளக்குகளை அனைத்து வண்ண வண்ண மின்விளக்குகள் ரசிகர்களை மகிழ்விக்க அதற்கு அவர்கள் மொபைல் விளக்கை எறிய விட்டது இரவை பகலாக்கியது.

உலகசாதனை:
அதைவிட 1,04,859 ரசிகர்கள் இந்த மாபெரும் இறுதிப் போட்டியை பார்க்க வந்ததாக ஐபிஎல் நிர்வாகம் போட்டியின் இடையே அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதன் வாயிலாக ஒட்டுமொத்த சர்வதேச அல்லது முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரசிகர்கள் பார்த்த ஒரு வெள்ளை பந்து போட்டியாக ஐபிஎல் 2022 தொடர் புதிய பிரம்மாண்ட உலக சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க : விட்டது கேட்ச்சை அல்ல, ராஜஸ்தானின் 13 வருட கனவு கோப்பைய ! முக்கிய நேரத்தில் சொதப்பிய நட்சத்திர வீரர்

இதற்கு முன் 1,00,024 அமர்ந்து பார்க்கக் கூடிய ஸ்ஸ்திரேலியாவில் உள்ள உலக புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் 1,00,022 ரசிகர்கள் பார்த்த ஒரு உலக கோப்பை போட்டியே அதிகபட்சமாக இருந்தது. ஆனால் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை மிஞ்சும் வகையில் 1,32,000 ரசிகர்கள் பார்க்கக்கூடிய நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று 1,04,859 ரசிகர்கள் ஐபிஎல் 2022 இறுதிப் போட்டியைப் பார்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளது இந்திய கிரிக்கெட்டுக்கு மேலும் ஒரு பெருமையாகும்.

Advertisement