விட்டது கேட்ச்சை அல்ல, ராஜஸ்தானின் 13 வருட கனவு கோப்பைய ! முக்கிய நேரத்தில் சொதப்பிய நட்சத்திர வீரர்

Chahal
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி மே 29-ஆம் தேதியான நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. அதில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றுகளில் அசத்திய குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அந்த மாபெரும் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தாலும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சுமாராக செயல்பட்டு வெறும் 130/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு ஜெய்ஸ்வால் 22 (16) கேப்டன் சஞ்சு சாம்சன் 14 (11) தேவதூத் படிக்கல் 2 (10) சிம்ரோன் ஹெட்மையர் 11 (12) என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 39 (35) ரன்கள் எடுத்தார்.

அந்த அளவுக்கு அசத்தலாக பந்துவீசி ராஜஸ்தானை மடக்கிப் பிடித்த குஜராத் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து 131 என்ற சுலபமான இலக்கை துரத்திய அந்த அணிக்கு ரிதிமான் சஹா 5 (7) மேத்தியூ வேட் 8 (10) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள். இருப்பினும் 3-வதாக களமிறங்கிய அசத்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா முக்கியமான 34 (30) ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்து அவுட்டானர்.

- Advertisement -

குஜராத் சாம்பியன்:
மறுபுறம் நிதானமாக பேட்டிங் செய்த மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் 45* (43) ரன்கள் எடுக்க கடைசி நேரத்தில் களமிறங்கி மிரட்டிய டேவிட் மில்லர் 32* (19) ரன்கள் எடுத்து பினிஷிங் கொடுத்ததால் 18.1 ஓவரிலேயே 133 ரன்கள் எடுத்த குஜராத் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதனால் தனது முதல் வருடத்திலேயே சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் கோப்பையை வென்ற அந்த அணி சாம்பியன் பட்டம் வென்று சரித்திரம் படைத்தது.

இந்த வெற்றிக்கு 34 ரன்கள் மற்றும் 3 விக்கெட்டுகள் எடுத்த முக்கிய பங்காற்றிய ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். மறுபுறம் லீக் சுற்றிலும் நாக் அவுட் சுற்றிலும் கலக்கிய ராஜஸ்தான் இந்த முக்கியமான போட்டியில் பேட்டிங்கில் சொதப்பியதால் 2008க்குப் பின் 2-வது கோப்பையை வெல்லும் பொன்னான வாய்ப்பை நழுவ விட்டது. இருப்பினும் அந்த அணிக்காக 863 ரன்கள் விளாசிய ஜோஸ் பட்லர் ஆரஞ்சு தொப்பியையும் 27 விக்கெட்டுகள் எடுத்த சஹால் ஊதா தொப்பியையும் என்றனர்.

- Advertisement -

தவறவிட்ட கேட்ச்:
முன்னதாக இந்த போட்டியில் பேட்டிங்கில் சுமாராக செயல்பட்ட ராஜஸ்தான் 131 என்ற குறைவான இலக்கை கட்டுப்படுத்த பந்து வீசிய போது 2-வது ஓவரில் பிரசித் கிருஷ்னா சஹாவையும் 3-வது ஓவரில் ட்ரெண்ட் போல்ட் மேத்தியூ வேடையும் அவுட் செய்ததால் ஆரம்பத்திலேயே போராடத் தொடங்கியது. அதனால் 23/2 என சரிந்த குஜராத்தை சுப்மன் கில் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்தனர். ஆனால் சஹா அவுட்டானதுமே சுப்மன் கில் 0 ரன்களில் இருந்த போது ட்ரெண்ட் போல்ட் வீசிய பந்தில் கொடுத்த கேட்ச்சை ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டிருந்த ராஜஸ்தான் வீரர் யுஸ்வென்ற சஹால் பிடிக்காமல் கோட்டை விட்டார்.

ஆனால் அதை பயன்படுத்தி கில் கடைசி வரை அவுட்டாகாமல் சிக்சர் அடித்து போட்டியை முடிக்கும் அளவுக்கு 45* ரன்கள் விளாசி ராஜஸ்தானுக்கு தோல்வியை பரிசளித்தார். ஒருவேளை அவர் அந்த கேட்ச் பிடித்திருந்தால் நிச்சயமாக அகமதாபாத் போன்ற பெரிய மைதானத்தில் 131 ரன்களை எட்டி பிடிக்க 18 ஓவர்களில் எடுத்துக்கொண்ட குஜராத் இன்னும் அதிகமாக போராட வேண்டியிருந்திருக்கும். ராஜஸ்தானும் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக ஏற்பட்டிருக்கும்.

13 கோப்பை:
இதே ஐபிஎல் தொடரில் சாதாரண லீக் போட்டியில் 12 ரன்களில் கொல்கத்தா இளம் வீரர் அபிஜித் தோமர் கேட்ச் விட்டதை பயன்படுத்திய குயின்டன் டி காக் 140* ரன்கள் விளாசி தோல்வியை பரிசளித்தார். அதேபோல் எலிமினேட்டர் போட்டியில் 70 ரன்களில் ரஜத் படிடார் கொடுத்த கேட்ச்சை தீபக் ஹூடா கோட்டை விட்டதை பயன்படுத்திய அவர் 114* ரன்கள் விளாசி தோல்வியை பரிசளித்தார். அதை எல்லாம் தெரிந்தும் கூட இப்படி ஒரு பிரம்மாண்ட இறுதிப் போட்டியில் இத்தனை வருடங்கள் விளையாடிய அனுபவம் நிறைந்த சஹால் விட்டது வெறும் கேட்ச் மட்டுமல்ல ராஜஸ்தானின் கோப்பையாகும்.

ஏனெனில் 2008இல் ஜாம்பவான் சேர்வாரன் தலைமையில் முதல் கோப்பையை வென்ற அந்த அணி அதன்பின் எவ்வளவோ முயன்றும் இறுதிப்போட்டிக்கு கூட தகுதி பெற முடியாமல் தவித்து வந்தது. அப்படிப்பட்ட நிலையில் 13 வருடங்கள் கழித்து கிடைத்த பொன்னான வாய்ப்பை வீணடிக்கும் வகையில் சஹால் விட்ட கேட்ச் மாறியது. இருப்பினும் மோசமான பேட்டிங் தோல்விக்கு முக்கிய பங்காற்றியதால் அவர் மீது முழு பழியையும் போட முடியாது என்பதும் நிதர்சனம்.

Advertisement