ஒருவேளை இந்த ஐ.பி.எல் தொடர் முழுவதுமாக கைவிடப்பட்டால் சாம்பியன் பட்டம் யாருக்கு ? – விவரம் இதோ

- Advertisement -

பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியாவில் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி துவங்கிய ஐபிஎல் தொடர் இதுவரை 29 லீக் போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. நேற்று நடைபெற இருந்த லீக் போட்டியில் இருந்து இந்த தொடரானது பெரிய சிக்கலை சந்தித்தது. அதாவது நேற்றைய போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோத இருந்த நிலையில் கொல்கத்தா அணியை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகியோருக்கு தொற்று ஏற்பட அந்த போட்டி ஒத்திவைக்கப்பட்டது.

sandeep

- Advertisement -

இந்நிலையில் சிஎஸ்கே அணியைச் சேர்ந்த மூன்று பேருக்கும், டெல்லி வீரர் அமித் மிஸ்ரா மற்றும் சன்ரைசர்ஸ் அணியைச் சேர்ந்த சஹா ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட தொடர் கொரோனா பரவல் காரணமாக பிசிசிஐ இந்த ஐபிஎல் தொடரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்த கொரோனா சூழலுக்கு மத்தியில் மக்களின் ஒரே ஒரு பொழுதுபோக்காக இருந்த இந்த ஐபிஎல் தொடரும் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் ரசிகர்கள் பெரும் வருத்தத்தில் உள்ளனர்.

இந்நிலையில் இந்த போட்டிகள் மீண்டும் எப்போது தொடங்கும் ? என்பது குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அதனால் போட்டி தொடங்கி தொடர்ந்து நடைபெறுமா ? இல்லை கைவிடப்படுமா ? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அதனைத்தொடர்ந்து ஒருவேளை இந்த தொடர் நடைபெறாமல் கைவிடப்பட்டால் யார் வெற்றி பெறுவார்கள் ? என்பது குறித்த கேள்வியும் தற்போது சமூக வலைதளத்தில் எழுந்துள்ளது.

புள்ளிபட்டியலின் அடிப்படையில் டெல்லி அணி 8 போட்டிகளில் விளையாடி 6 வெற்றியுடன் 12 புள்ளிகளுடன் உள்ளது. அதே வேளையில் சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆனால் சென்னை அணியின் ரன்ரேட் அடிப்படையில் +1.263 முன்னிலையில் உள்ளது. ஆனால் டெல்லி அணி +0.547 என்ற விகிதத்தில் உள்ளது. இதனால் புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி அறிவிப்பார்களா ? அல்லது ரன்ரேட் அடிப்படையில் அறிவிப்பார்களா ? என்று சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் ஒரு சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

rcbvsdc

ஆனால் பிசிசிஐ விதிமுறைப்படி இந்த தொடரானது கைவிடப்பட்டால் வின்னர் என அறிவிக்கப்பட மாட்டார்கள். மேலும் யார் சாம்பியன் என்றும் கூற மாட்டார்கள். ஏனெனில் ஒட்டுமொத்த தொடரும் கைவிடப்படும் போது யாரும் வெற்றியாளர்கள் கிடையாது. யாரும் தோல்வியாளர்கள் கிடையாது. அதே போன்று பரிசுகளும் கிடைக்காது. இந்த வருடம் நடைபெற்ற தொடர் பாதியிலேயே நின்றதாக தெரிவிக்கப்படும்.

Advertisement