பஞ்சாப் அணி வீரர்கள் சி.எஸ்.கே அணியை பாத்து இந்த விஷயத்தை கத்துக்கனும் – விளாசிய சேவாக்

Sehwag

நேற்று அகமதாபாத் மைதானத்தில் முதல் ஐபிஎல் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிக்கொண்டன. இதில் முதலில் பேட்டிங் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 123 ரன்கள் குவித்தது. கேப்டன் கே எல் ராகுல் 20 பந்துகளில் 19 ரன்கள் மட்டும் தான் குவித்தார்.அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
அதேபோல் முந்தைய போட்டிகளில் சொதப்பிய நிக்கோலஸ் பூரன் இந்த போட்டியில் ஆரம்பத்தில் நன்றாக விளையாடினாலும் திரும்பவும் சொதப்பி 19 பந்துகளில் வெறும் 19 ரன்களில் தான் எடுத்தார்.

rahul

மயங்க் அகர்வால் மற்றும் ஜோர்டான் ஓரளவு நன்றாக விளையாடிய காரணத்தினால் அந்த அணியால் இறுதியில் 123 ரன்கள் குவிக்க முடிந்தது. பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணியின் வீரர்கள் ஆரம்பத்தில் சொதப்பினார்கள். பின்னர் ராகுல்திரிப்பாதி மற்றும் இயான் மோர்கன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாட தொடங்கினார்கள். அவர்களின் அதிரடியான ஆட்டம் காரணமாக கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. புள்ளிப் பட்டியலில் கொல்கத்தா அணி 5வது இடத்திற்கு முன்னேறியது.

இந்நிலையில் இந்த போட்டி குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் : பஞ்சாப் அணி தோற்றதற்கு ஒரு மிகப்பெரிய காரணம் கே எல் ராகுல், கிறிஸ் கெயில், ஜோர்டான், மயங்க் அகர்வால் தீபக் ஹூடா மற்றும் நிக்கோலஸ் பூரன் போன்ற அதிரடியான வீரர்கள் இருக்கும் நிலையில், அந்த அணியின் வீரர்கள் மிகவும் நிதானமாக விளையாடுவது சரியாக படவில்லை என்று கூறினார்.

agarwal

அந்த அணியின் மிகப்பெரிய தவறு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரம்பத்தில் விக்கெட்டு விடாமல் ஆட வேண்டும் என்கிற முனைப்புடன் விளையாடி வருகின்றனர். இப்படி ஆடினால் பின்னால் வரும் வீரர்களுக்கு தான் அது நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் உணர வேண்டும்.
உதாரணத்திற்கு சென்னை அணியின் வீரர்கள் ஒவ்வொரு வீரரும் குறைந்தபட்சம் 20-30 ரன்கள் அடிக்கின்றனர். அதே அதிரடி ஆட்டத்தை பஞ்சாப் அணியின் வீரர்கள் அனைவரும் காட்ட வேண்டும். பஞ்சாப் அணியில் இருக்கும் வீரர்கள் அனைவரும் மிகவும் திறமை வாய்ந்த வீரர்கள். அவர்கள் ஏதும் எந்த மாதிரியான பந்துகளையும் மேற்கொண்டு அதிரடியாக ஆட முடியும்.

- Advertisement -

Rahul

எனவே இனி வரும் போட்டிகளில் அந்த அணி ஒரு வீரரை மட்டும் நம்பி இருக்காமல், ஒரு அணியாக அனைத்து வீரர்களும் தங்களுடைய அதிரடி ஆட்டத்தை காட்ட வேண்டும். அப்படிக் காட்டினால் பஞ்சாப் அணி நிச்சயமாக இனி அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெறும் என்று விரேந்திர சேவாக் அறிவுறுத்தி உள்ளார்.