2021 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரில் இதுவரை படைக்கப்பட்ட சாதனை விவரங்கள் – விவரம் இதோ

ipl
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரானது கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஆனால் தொடரில் பங்கேற்றுள்ள சில வீரர்களுக்கு கொரானா தொற்று உறுதியானதையடுத்து, இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரானது காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 60 போட்டிகள் நடைபெற்றிருக்க வேண்டிய இத்தொடரில் தற்போதுவரை 29 போட்டிகள் மட்டுமே முடிந்துள்ளன. இந்த 29 போட்டிகளின் நிலவரப்படி, இந்த தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள வீரர்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

- Advertisement -

அதிக ரன்கள்:

ஒவ்வொரு ஐபிஎல் தொடரின் இறுதியிலும் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேனுக்கு, ஆரஞ்சு கேப் வழங்கப்படுவது ஐபிஎல் தொடரின் சிறப்பம்சாமாகும். தற்போது 29 போட்டிகள் மட்டுமே முடிந்துள்ள நிலையில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை சேர்ந்த ஷிகர் தவான். இவர் 8 போட்டிகளில் டெல்லி அணிக்காக களம் இறங்கி 380 ரன்கள் எடுத்துள்ளார். இத்தொடரில் இவரின் சராசரி 54.28 ஆக இருக்கிறது.

அதிக சிக்ஸர்கள்:

- Advertisement -

ஐபிஎல் தொடர் என்றாலே சிக்ஸர்களுக்கு பஞ்சமிருக்காது. அதுபோலவே இந்த தொடரில் 29 போட்டிகள் மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில் மொத்தம் 380 சிக்சர்கள் அடிக்கப்பட்டுள்ளது. இதில் பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் 7 போட்டிகளில் விளையாடி 16 சிக்சர்கள் அடித்து, இத்தொடரில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

அதிக பவுண்டரிகள்:

- Advertisement -

ஐபிஎல்லில் பவர் ஹிட்டர்கள் ஒரு புறம் சிக்ஸர் மழை பொழிந்தாலும், ஸ்டைலிஸான பேட்ஸ்மேன்கள் அற்புதமாக ட்ரைவ் ஆடி பவுண்டரிகளை குவித்து ஆட்டத்திற்கு அழகு சேர்ப்பார்கள். இதுவரை இத்தொடரில் 810 பவுண்டரிகள் அடிக்கப்பட்டிருக்கிறது. 8 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி கேப்பிடல் அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவன் 43 பவுண்டரிகள் அடித்து அதிக பவுண்டரிகள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

சிறந்த பேட்டிங் பர்ஃபார்மன்ஸ்:

- Advertisement -

ஒரு போட்டியில், ஒரு பேட்ஸ்மேனால் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களின் பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஜோஸ் பட்லர் முதலிடத்தில் இருக்கிறார். இவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடி 124 ரன்கள் அடித்ததே இத்தொடரில் ஒரு வீரர், ஒரு போட்டியில் அடித்த அதிகபட்ச ஸ்கோராக இருக்கிறது.

Harshal

அதிக விக்கெட்டுகள்:

அதிக ரன்கள் அடிக்கும் வீரருக்கு எப்படி ஆரஞ்சு கேப் வழங்கப்படுகிறதோ, அதேபோல் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுக்கும் வீரருக்கு பர்பிள் கேப் வழங்குவதும் ஐபிஎல்லின் மற்றொரு சிறப்பம்சமாக இருக்கிறது. இத்தொடரில் பெங்களூர் அணிக்காக 7 போட்டிகளில் விளையாடியுள்ள ஹர்ஷல் பட்டேல் 17 விக்கெட்டுகளை கைப்பற்றி இத்தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இத்தொடரில் இவருடைய எகானமி ரேட் 9.17 ஆக இருக்கிறது.

சிறந்த பந்து வீச்சு:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் ஆன ஆண்ட்ரு ரஸல் மும்பைக்கு எதிராக 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதே, இத்தொடரில் ஒரு போட்டியில், ஒரு பந்து வீச்சாளரின் சிறந்த பவுலிங் பர்ஃபாமன்சாக இருக்கிறது.

மிக வேகமான பந்து:

இத் தொடரில் பேட்ஸ்மேன்கள் தங்களது அதிரடியான ஆட்டத்தின் மூலம் பந்து வீச்சாளர்களை பயமுறுத்தினாலும், பௌலர்களும் தங்களது அதிவேக பந்துவீச்சின் மூலம் பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைத்திருக்கின்றனர். இத்தொடரில் 148.43 வேகத்தில் பந்து வீசிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி பௌலரான காகிசோ ரபாடா முதலிடத்தில் உள்ளார்.

pollard

அதிக தூர சிக்சர்:

இத்தொடரில் அடிக்கப்பட்ட 380 சிக்சர்களில், 105 மீட்டர் தூரம் சிக்ஸடித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கைரன் பொல்லார்ட் அதிக தூரம் சிக்ஸ் அடித்தவர் என்ற பெருமையை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இதுவரை இத்தொடரில் இரண்டு சிக்ஸர்கள் மட்டுமே 100 மீட்டருக்கு அடிக்கப்பட்டிருக்கிறது. அந்த இரண்டு சிக்ஸர்களுமே பொல்லார்ட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement