கோலிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த டெல்லி அணியின் இளம்வீரர் – சவாலான இலக்கு நிர்ணயிப்பு

Kohli-1
- Advertisement -

பெங்களூர் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான 22 வது லீக் போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீசி முடித்துள்ளது. 20 ஓவர்களின் முடிவில் பெங்களூர் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் குவித்துள்ளது. இதன்காரணமாக 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது டெல்லி அணி பேட்டிங் இறங்க தயாராகி வருகிறது.

kohli

- Advertisement -

துவக்க வீரர்களான கோலி மற்றும் படிக்கல் ஆகியோர் 12 மற்றும் 17 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இருந்து வெளியேறிய நிலையில் ராஜட் படித்தார் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் சிறிய பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஒரு கட்டத்தில் மேக்ஸ்வெல்லும் 25 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

அதன்பிறகு பட்டிதார் மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோர் பெங்களூரு அணியின் ஸ்கோரை ஒரு நல்ல பாட்னர்ஷிப் அமைத்து உயர்த்தினர். பட்டிதார் 31 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதி சில ஓவர்களை சந்திக்க ஏபி டிவில்லியர்ஸ் தயாராக இருந்தார். ஏற்கனவே டெல்லி அணியின் இளம் வீரரான ஆவேஷ் கான் ஓவரில் கோலி இன்சைட் எட்ஜ் ஆகி போல்ட் ஆகி ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்த வேளையில் டிவில்லியர்ஸ் இந்த போட்டியில் விரைவில் ஆட்டம் இழந்திருந்தால் பெங்களூரு அணியால் இந்த ரன் குவிப்பை அளித்து இருக்க முடியாது.

ஆனால் பொறுமையாக இறுதிவரை களத்தில் இருந்த டிவில்லியர்ஸ் 42 பந்துகளில் சந்தித்து 5 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரி என 75 ரன்கள் அடித்து அசத்தினார். அதிலும் குறிப்பாக டெல்லி அணியின் வீரர் ஸ்டாய்நிஸ் வீசிய 20 ஆவது ஓவரில் 3 சிக்சர்கள் உடன் 23 ரன்களை விளாசி அணியை ஓரளவு நல்ல ரன் குவிப்புக்கு விட்டு வந்துள்ளார்.

துவக்கத்தில் கோலி விக்கெட்டை எடுத்தற்கு ஏ.பி.டி திருப்பி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது டெல்லி அணி 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாட களம் இறங்க தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement