இந்த ஐ.பி.எல் தொடரில் பிடிக்கப்பட்ட கேட்ச்லயே இதான் பெஸ்ட். பிரமிக்க வைத்த பிஸ்னோய் – வைரலாகும் வீடியோ

Bishnoi

ஐபிஎல் தொடரின் இரண்டாவது கட்டப் போட்டிகள் நேற்று அகமதாபாத் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் மோதின. இதுவரை நடைபெற்ற போட்டிகள் அனைத்தும் மும்பை மற்றும் சென்னை மைதானங்களில் நடைபெற்றதால் நேற்றைய அகமதாபாத் போட்டி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. ஏனெனில் சென்னையில் லோஸ்கோரிங் போட்டிகளும், மும்பையில் ஹைஸ்கோரிங் போட்டிகளும் அமைந்த நிலையில் இந்த அகமதாபாத் ஆடுகளம் எவ்வாறு அமையப்போகிறது என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர்.

pbksvskkr

இருப்பினும் இந்த போட்டி முழுவதும் கொல்கத்தா அணி ஆதிக்கம் செலுத்தி 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. நல்ல பேட்டிங் பிட்ச் ஆன இந்த அகமதாபாத் மைதானத்தில் பஞ்சாப் அணி மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 123 ரன்களை மட்டுமே குவித்தது.

இதன் காரணமாக கொல்கத்தா அணி எளிதாக 17 ஓவரிலேயே பஞ்சாப் அணியை வீழ்த்தியது. இந்நிலையில் இந்த போட்டியின்போது பவர் பிளே ஓவர்களில் 3 விக்கெட்டுகளை பஞ்சாப் அணி வீரர்கள் வீழ்த்திருந்தனர். அதிலும் குறிப்பாக சுனில் நரைன் அடித்த பந்தை பவுண்டரி லைனில் கேட்ச் பிடித்த இளம் வீரர் ரவி பிஷ்னோய் எல்லோரையும் ஆச்சரியப்படுத்தினார்.

மிகவும் கஷ்டமான அந்த கேட்சை ஓடி வந்தது மட்டுமின்றி பெரிய டைவ் ஒன்றினை அடித்து அந்த கேட்சை லாவகமாக பிடித்து அனைவரையும் பிரமிக்க வைத்தார். நிச்சயம் இந்த கேட்ச் இந்த ஐபிஎல் தொடரின் சிறந்ததாக அமையும் என்று பலரும் பாராட்டி இந்த வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள். இந்த தொடரின் முதல் 3 போட்டிகளில் விளையாடாத பிஷ்னோய் கடந்த மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து இந்த போட்டியிலும் சிறப்பாக பந்துவீசி அதுமட்டுமின்றி பீல்டிங்கிலும் அவர் அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.