அன்று அஷ்வின். நேற்று மிஸ்ரா. பண்ட் செய்த தவறால் வெற்றியை தாரை வார்த்த டெல்லி அணி – ரொம்ப பாவங்க அந்த டீம்

Pant
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரின் 22 வது லீக் போட்டியானது நேற்று அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும், ரிஷப் பன்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் நடைபெற்றது. மிகவும் விறுவிறுப்பாக சென்ற இப்போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல் அணியை வீழ்த்தியது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி. முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 171 ரன்கள் எடுத்தது. பின்பு இரண்டாவது இன்னிங்சை ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர் முடிவற்ற நிலையில் 4 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது.

rcbvsdc

- Advertisement -

இதன்மூலம் ஒரு ரன் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்திய பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு சென்றது. இந்த போட்டியில் ரிஷப் பண்ட் இதற்கு முன்பு ராஜஸ்தான் அணிக்கு எதிராக கேப்டன்சியில் செய்த அதே தவறை மீண்டும் செய்து தோல்விக்கு வழிவகுத்திருக்கிறார். நேற்று நடைபெற்ற போட்டியில் முதல் இன்னிங்சை ஆடிய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தொடக்கத்திலேயே அந்த அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் படிக்கல் ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, தனது அதிரடி பேட்டிங்மூலம் பெங்களூர் அணியை மீட்டெக்கும் முயற்சியில் இருந்தார் அந்த அணியின் வீரர் மேக்ஸ்வெல்.

ஆனால் அவரை ஒன்பதாவது ஓவர் 3வது பந்தை வீசிய அமித் மிஸ்ரா விக்கெட் எடுத்து பெங்களூர் அணியின் ரன் வேகத்தை கட்டுப் படுத்தினார். மேக்ஸ்வெல் அவுட்டானதும் களத்திற்கு வந்த ஏபி டி வில்லியர்ஸ் மற்றொரு புறம் இருந்த இளம் வீரரான படிதாருடன் இணைந்து மேலும் விக்கெட் விழாத வண்ணம் பொறுப்பாக விளையாட ஆரம்பித்தார். இந்த இருவரும் விக்கெட் விழாமல் தடுத்து ஆடியதால் மிடில் ஓவர்களில் அதிகமான ரன்களை அவர்களால் எடுக்க முடியவில்லை. இதற்கிடையில் 11வது ஓவரை வீசி முடித்த அமித் மிஸ்ராவிற்கு அதற்குப் பிறகு பௌலிங் போட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

Mishra 1

மேக்ஸ்வெல்லின் விக்கெட்டை எடுத்த அமித் மிஸ்ராவிற்கு மூன்று ஓவர்களை மட்டுமே கொடுத்த ரிஷப் பன்ட் அவருக்கான இன்னொரு ஓவரை வீச வாய்ப்பு வழங்காமல் இருந்தார். மேக்ஸ்வெல் அவுட்டானதும் களத்திற்குள் வந்த ஏபி டி வில்லியர்ஸ் நன்றாக செட்டில் ஆகிய பின்னர் டெல்லி அணியின் பந்து வீச்சாளர்களை அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தார். எனவே அப்போது அமித் மிஸ்ராவுக்கு ஓவர் வழங்க முடியாத சூழ்நிலையில் தவித்தார் ரிஷப் பண்ட். எனவே இருபதாவது ஓவரை வீச மார்க்கஸ் ஸ்டொய்னிசை அழைத்து வந்தார். அந்த ஓவரில் அதிரடி காட்டிய ஏபி டி வில்லியர்ஸ் கடைசி ஓவரில் மட்டும் 23 ரன்கள் குவித்து பெங்களூர் அணியின் ஸ்கோரை 171க்கு உயர்த்தி இறுவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

- Advertisement -

அமித் மிஸ்ராவிற்கு மட்டும் இடையில் ஒரு ஓவர் வீச வாய்ப்பு வழங்கியிருந்தால், 20வது ஓவரை ஸ்டொய்னிஸ்தான் வீச வேண்டுமென்ற என்ற கட்டாயத்திற்கு உள்ளாகியிருக்காது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. அந்த இருபதாவது ஓவர்தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. இதே போன்ற தவறை ரிஷப் பண்ட் ஏற்கனவே செய்துள்ளார். இந்த தொடரின் ஏழாவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்ட டெல்லி கேப்பிடல்ஸ் அணி அந்த அணிக்கு 148 ரன்களை இலக்காக நிர்ணயித்திருந்தது.

stonis 1

அப்போதும் மிகச் சிறப்பாக பந்துவீசி எதிரணியின் ரன் குவிக்கும் வேகத்தை கட்டுப் படுத்திக் கொண்டிருந்த ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு 3 ஓவர்கள் மட்டுமே கொடுத்து விட்டு, ஒரு ஓவரை மார்கஸ் ஸடொய்னிசிற்கு வழங்கினார் ரிஷப் பண்ட். அதுவரை ரன் குறிக்கவே சிரமப்பட்டுக் கொண்டிருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்கள் ஸ்டெய்னிசின் ஓவரை பிரித்து மேய்ந்து ஆட்டத்தின் போக்கையே தங்கள் பக்கம் திருப்பிக் கொண்டனர். இப்போது அதேபோல் மீண்டும் ஒரு தவறை செய்து வெற்றியை எதிரணிக்கு தாரை வார்த்திருக்கிறார் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பன்ட்.

Advertisement