அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படிக்கல்லை ரன் அடிக்க விடாமல் அப்படியே பார்செல் செய்த சீனியர் வீரர் – விவரம் இதோ

Padikkal

பெங்களூர் மற்றும் டெல்லி ஆகிய அணிகளுக்கு இடையேயான 22வது ஐபிஎல் லீக் போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகள் விளையாடிய 5 போட்டிகளில் நான்கு வெற்றிகளுடன் 8 புள்ளிகள் உடன் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. ஆனாலும் ரன்ரேட் அடிப்படையில் டெல்லி அணி இரண்டாம் இடத்திலும், பெங்களூரு அணி 3-வது இடத்திலும் உள்ளது.

RCBvsDC

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் என்ற காரணத்தினால் தற்போது இந்த போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்துள்ளார்.

அதன்படி தற்போது பெங்களூர் அணி பேட்டிங் செய்து வருகிறது. கடந்த போட்டிக்கு முன்னர் பெங்களூர் அணியின் துவக்க வீரரான படிக்கல் அதிரடியாக விளையாடி சதம் அடித்து இருந்ததால் இந்த போட்டியிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துவக்கத்திலேயே கோலி துவக்கத்திலேயே 11 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

kohli

இந்நிலையில் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட படிக்கல் 14 பந்துகளை சந்தித்து 3 பவுண்டரியுடன் 17 ரன்களை எடுத்த நிலையில் இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சில் கிளீன் போல்டாகி வெளியேறினார். கோலி ஆட்டமிழந்த அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே படிக்கல் ஆட்டம் இழந்ததால் தற்போது பெங்களூர் அணி சற்று சிக்கலான நிலையில் விளையாடி வருகிறது.

- Advertisement -

padikkal 1

இந்த போட்டியில் அஸ்வினுக்கு பதிலாக களமிறங்கிய இந்திய அணியின் சீனியர் வீரர் இஷாந்த் சர்மா தனது துல்லியமான பந்துவீச்சின் மூலம் அதிக ரன்கள் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட படிக்கலை கிளீன் போல்டாக்கி வெளியேற்றியுள்ளது சிறப்பான ஒன்று என்றே கூறலாம்.