தோல்வியை ஜீரணிக்கும் முன்னர் கோலிக்கு வந்த புதிய சிக்கல். நடவடிக்கை எடுத்த நிர்வாகம் – விவரம் இதோ

Kohli-1

நேற்று மதியம் நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதிக்கொண்டன இதில் முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர் முடிவில் 191 ரன்கள் குவித்தது. ருத்ராஜ் 33 டுப்லஸ்ஸிஸ் 50 ரன்கள் குவிக்க சென்னை அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது. அதன் பின்னர் அணியில் சில சறுக்கல் ஏற்பட்டது, சுரேஷ் ரெய்னா 24 ரன்கள் மற்றும் அம்பத்தி ராயுடு 14 ரன்கள் எடுத்து அவுட்டாகி சென்றுவிட சென்னை அணி 19 ஒவ்வொரு முடிவில் 154 ரன்கள் எடுத்து இருந்தது.

Harshal

இந்த போட்டி சென்னையின் கையை விட்டு போய் விட்டது என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்த வேளையில் 20 ஆவது ஓவரில் ரவீந்திர ஜடேஜா அதிரடியாக ஆடி 37 ரன்கள் குவித்தார். அதன் காரணமாக சென்னை அணியால் 20 ஓவர் முடிவில் 191 ரன்கள் குவிக்க முடிந்தது. சிறப்பாக ஆடிய ரவிந்திர ஜடேஜா 28 பந்துகளில் 62 ரன்கள் குவித்து இருந்தார். அதன் பின்னர் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை.

அந்த அணியில் அதிகபட்சமாக படிக்கல் 34 ரன்கள் மற்றும் மேக்ஸ்வெல் 22 ரன்கள் மட்டுமே குவித்தனர். இதன் காரணமாக பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் வெறும் 122 ரன்கள் மட்டும் தான் குவித்தது. இதன் மூலம் சென்னை அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு சென்றது.

jadeja 1

நேற்று சென்னை அணியை கடைசி ஓவரில் கட்டுப்படுத்த முடியாமல் அதிக இலக்கை நிர்ணயிக்க வைத்தது மட்டுமல்லாமல், ஆட்டத்தை 90 நிமிடங்களுக்குள் முடிக்காமல் அதுக்கு நேரங்களையும் விராட் கோலி எடுத்துக் கொண்டார். இதன் காரணமாக பிசிசிஐ முன்னரே கூறியிருந்த விதியின்படி விராட் கோலிக்கு நேற்று அபராதமாக 12 லட்ச ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. நேற்று பேட்டிங்கிலும் விராட் கோலி சொதப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

harshal 1

பொதுவாக இலக்கை சேஸ் செய்வதில் விராட் கோலி மிகச்சிறந்த வீரர் ஆவார் ஆனால் நேற்றைய போட்டியில் வெறும் 8 ரன்கள் மட்டும் ஆகி பெங்களூர் ரசிகர்கள் அனைவரையும் ஏமாற்றினார். மேலும் கோலி இன்னும் இரண்டு மூன்று போட்டிகளில் அதேபோல் தாமதமாக போட்டியை முடித்தால் அவருக்கு அபராதம் விதிப்பது ஒரு மட்டுமல்லாமல் ஒரு போட்டி விளையாட முடியாமல் தடை விதிக்கவும் வாய்ப்புள்ளது. இந்த செய்தியை அறிந்த பின் வரும் ரசிகர்கள் மேலும் வருத்தத்தில் உள்ளனர்.