ஒரே ஆளாக அணிக்கு வெற்றியை பெற்றுத்தரும் அளவிற்கு இவரிடம் தகுதி இருக்கு – தோனி புகழாரம்

Dhoni

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற 19ஆவது லீக் போட்டியில் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை வகிக்கும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளி பட்டியலில் முதலிடம் வகிக்கும் என்பதாலும், தோனி கோலி இடையே நடைபெறும் மோதல் என்பதாலும் இந்த போட்டியில் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருந்தது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய சென்னை அணி முதலில் விளையாடி 191 ரன்கள் குவிக்க அதனை தொடர்ந்து விளையாடிய பெங்களூர் அணி 122 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 69 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது மட்டுமின்றி புள்ளி பட்டியலிலும் முதலிடம் பெற்றது.

சென்னை அணியின் இந்த அசத்தலான ஆட்டத்திற்கு பிறகு வெற்றி குறித்து பேசிய தோனி பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஜடேஜா போன்ற ஒரு வீரர் தனியாளாக நிச்சயம் ஒரு போட்டியை மாற்றும் அளவிற்கு திறமை உடையவர். கடந்த சில ஆண்டுகளாக ஜடேஜா பேட்டிங்கில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளார். தற்போது அவரது பவுலிங்கிற்கு இணையாக அவரது பேட்டிங் சிறப்பாக உள்ளதால் அவரால் எங்களுக்கு வெற்றியைத் தர முடிகிறது.

மேலும் அவருக்கு அதிக வாய்ப்புகளை நான் முன்கூட்டியே வழங்குவதால் அவரால் களத்தில் நின்று பேட்டிங் பேட்டிங் செய்து அதிக ரன்களையும் கொடுக்க முடிகிறது. கொடுக்கப்படும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி அதனை அவர் சிஎஸ்கே அணிக்காக செய்து வருகிறார் என்று ரவீந்திர ஜடேஜாவை தோனி நேற்று பாராட்டுடியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

jadeja 2

நேற்று 19ஆவது ஓவர் வரை சென்னை அணி சற்று சாதாரண நிலையிலேயே இருந்த வேளையில் 20 ஆவது ஓவரில் ஜடேஜா 37 ரன்கள் அடித்து போட்டியை சிஎஸ்கே அணியின் பக்கம் திருப்பினார். அதுமட்டுமின்றி பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட்ட அவர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதுமட்டுமின்றி பீல்டிங்கிலும் ஒரு ரன் அவுட் செய்து மூன்று தரப்பிலும் இருந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.