வீணாய் போன வில்லியம்சனின் அதிரடி. அசத்திய சி.எஸ்.கே அணியின் துவக்க ஜோடி – அசத்தலான வெற்றி

dhoni

ஐபிஎல் தொடரின் 23வது லீக் போட்டி தற்போது டெல்லி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 61 ரன்களையும், வார்னர் 57 ரன்களை குவித்தனர்.

இறுதிநேரத்தில் அதிரடியாக விளையாடிய கேன் வில்லியம்சன் 10 பந்துகளில் 26 ரன்கள் குவித்தார். அதன் பின்னர் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக துவக்கவீரர் கெய்க்வாட் 75 ரன்களும், டூபிளெஸ்ஸி 56 ரன்களையும் அடித்து அசத்தினார். இந்த போட்டியின் முதல் பேட்டிங்கின்போது டீசன்டான ரன் குவிப்பு வருமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இறுதியில் அதிரடியாக விளையாடிய வில்லியம்சன் 10 பந்துகளில் 26 ரன்கள் குவித்து ஓரளவு டீசன்ட்டான இலக்கை நிர்ணயம் செய்ய உதவினார்.

faf 1

ஆனால் அதனை எதிர்கொண்டு ஆடிய சென்னை அணியின் துவக்க வீரர்கள் கெய்க்வாட் மற்றும் டூபிளெஸ்ஸிஸ் ஆகியோரின் அசாத்தியமான ஆட்டத்தினால் முதல் விக்கெட்டுக்கு 129 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததால் சென்னை அணி எளிதான வெற்றியை இந்த போட்டியில் பெற்றது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த போட்டியில் பெற்ற வெற்றியோடு சேர்த்து சென்னை அணி 5 வெற்றிகளுடன் (10 புள்ளிகள்) புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.