11 ஐ.பி.எல் போட்டி கடந்த(மே 27) முடிவடைந்தது. ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் பல இளம் வீரர்களின் திறமைகள் வெளியாகிறது. இதன் மூலம் இந்திய அணிக்கு சிறந்த வீரர்கள் கிடைத்து வருகின்றனர். இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியிலும் பல்வேறு வீரர்கள் சிறப்பாக விளையாடியுள்ளனர். அதில் இந்த தொடரில் சிறப்பாக பந்துவீசிய டாப் 5 அதிவேக பந்துவீச்சாளரங்கள் யாரென்பதை கொஞ்சம் காணலாம்.
பில்லி ஸ்டேன்லேக்:-
இந்த தொடரில் இரண்டாம் இடத்தை பிடித்த ஹைதராபாத் அணியில் விளையாடி வந்த ஆஸ்திரேலியா வீரர். இந்த தொடரில் அதிவேக பந்தை வீசிய பட்டியலில் முதல் இடத்தில இருக்கிறார். மணிக்கு 151.38 கி.மீ என்ற வேகத்தில் பந்தை வீசியுள்ளார்.
முகமது சிராஜ் :- 24
வயதாகும் இந்த இளம் வீரர் இந்த ஆண்டு பெங்களூரு அணியில் இடம்பெற்றார். 11 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள இவர், அதிவேகமாக 149.94 கி.மீ வேகத்தில் பந்தை வீசியுள்ளார்.
சிவம் மவி:-
யூ19 போட்டிகளில் விளையாடி வந்த இந்த 19 வயது வீரர், கொல்கத்தா அணியால் 3 கோடி ரூபாய் கொடுத்து ஏலமெடுக்க பட்டார் . மேலும் அதிவேக பந்து வீச்சாளர் பட்டியலில் 149.85 கி.மீ வேகத்துடன் மூன்றாம் இடத்தில் உள்ளார்.
ஜோஃப்ரா ஆர்ச்சர்:-
இந்த பட்டியலில் 4வது இடத்தில மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் இருக்கிறார். ராஜஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர்த்தன இவர் 10 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை வீசியுள்ளார். இவர் இந்த தொடரில் அதிவேகமாக வீசிய பந்து 149.50 கி.மீ ஆகும்.
அவேஷ் கான்:-
இந்த பட்டியலில் கடைசி இடத்தில் இந்திய இளம் வீரரான அவேஷ் கான் இருக்கிறார். 7 போட்டிகளில் வாய்ப்பை பெட்ரா இவர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். டெல்லி அணியில் விலையடைய இவர் 149.12 கி.மீ வேகத்துடன் 5 வது இடத்தில இருக்கிறார்.