காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய இளம் அதிரடி வீரர் – யார் தெரியுமா ?

இந்த 11வது ஐபிஎல் சீசனில் ஏற்கனவே பல்வேறு அணியின் வீரர்கள் பல காரணங்களுக்காக வெளியேறியுள்ளனர்.இந்நிலையில் தற்போது கொல்கத்தா அணியிலிருந்து அந்த அணியின் கமலேஷ் நாகர்கோட்டி காயம் காரணமாக ஐபிஎல்-இல் இருந்து விலகுவதாகவும் அவருக்கு பதிலாக கர்நாடகாவை சேர்ந்த பிரதிஸ் கிருஷ்ணா அணியில் மாற்றுவீரராக இடம்பெற்று இருக்கின்றார்.

Nagarkot

ஏற்கனவே ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் கொல்கத்தா அணியிலிருந்து காயம் காரணமாக வெளியேறியது குறிப்பிடத்தக்கது. இவருக்கு மாற்று வீரராக இங்கிலாந்தை சேர்ந்த டாம் குர்ரன் சேர்க்கப்பட்டார்.தற்போது கொல்கத்தா அணியின் மற்றொரு முக்கிய பந்துவீச்சாளரான நாகர்கோட்டியும் காயம் காரணமாக விலகியுள்ளதால் அந்த அணிவீரர்கள் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஏற்கனவே சென்னை அணிக்கு எதிரான போட்டியின்போது சிறந்த பந்துவீச்சாளர்கள் இல்லாத காரணத்தினால் கடைசி ஓவரில் 17 ரன்களை விட்டுக்கொடுத்து தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.தற்போது நாகர்கோட்டியும் அணியில் இல்லாதது நிச்சயமாக கொல்கத்தா அணிக்கு பேரிழப்பு தான்.

VIJAY

கொல்கத்தா அணி இந்த ஐபிஎல் சீசனில் கமலேஷ் நாகர்கோட்டியை 3.2 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.இன்றைய ஐபிஎல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

- Advertisement -