ஐபிஎல்-லில் சென்னை அணியிலிருந்து விலகும் டாப் 5 அதிரடி வீரர்கள்..!

jadeja
- Advertisement -

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் ஆட்டம் அபாரமாக இருந்தது. இரண்டு ஆண்டுகள் அனுபவித்த தடையை உடைத்து எரிந்தது போல ஐபிஎல் தொடரில் 3 வது முறையாக தனது வெற்றியை பதிவிட்டு மும்பை அணித்தின் சாதனை இடத்தை பகிர்ந்து கொண்டது.

இந்த ஐபிஎல் தொடரில் பல்வேறு வீரர்கள் நன்றாக விளையாடிளும், ஒரு சில வீரர்களின் மோசன ஆட்டத்தால் அவர்கள் அணியில் இருந்து வெளியேறுவதற்கான கதவின் சாவியை பெற்றுக் கொண்டுள்ளனர். அந்த வகையில் அடுத்தாண்டு சென்னை அணியில் விளையாடும் என்ட்ரி சீட்டை இழக்க போகும் டாப் 5 வீரர்களின் பட்டியளை கொஞ்சம் இங்கே கண்டு விட்டு செல்லலாம்.

1.கே எம் ஆசிப்:- சென்னை அணியின் சிந்தனை பெட்டியில் நீக்க வேண்டிய பட்டியலில் காத்துக்கொண்டிருக்கும் ஒரு வேகப்பந்து வீச்சாளர். இந்த தொடரில் இவரது பந்துவீச்சு சிறப்பாக இல்லாததால் இவருக்கு அதிகப்படியான வாய்ப்புகள் வழங்கபட வில்லை.இவருக்கு கொடுக்கப்பட்ட இரண்டு போட்டிகளில் ரன்களை வாரி வழங்கினார்.இருப்பினும் சமாளித்து மூன்று விக்கெடுகளை தனது பைக்குள் போட்டுக்கு கொண்டார்.
murali viajy

- Advertisement -

2.துருவ் ஷோரே:- இந்த ஐபிஎல் போட்டியில் புள்ளையார் சுழி போட்டு விளையாடிய இந்த இளம் வீரர். தான் ஆடும் முதல் ஐபிஎல் தொடர் என்பதை மறந்து விட்டார் போல. டெல்லி அணி உள்ளுர் வீரரான இவருக்கு இந்த தொடரில் சென்னை அணி ஒரு வாய்ப்பை மட்டுமே தந்தது. ஆனால் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் வெறும் 8 ரன்களை மட்டுமே எடுத்து அடுத்த ஆண்டு சென்னை அணியின் இருக்கையில் அமரும் வாய்ப்பை இழந்துள்ளார்.

3.முரளி விஜய் :- முன்னாள் இந்திய வீரராக இன்டஜும் இவருக்கு சென்னை அணியில் அதிகப்படியான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. துவக்க ஆட்டக்காரரான இவருக்கு , வாட்ஸன் மற்றும் அம்பத்தி ராயுடுவால் அந்த இடம் பறிக்கப்பட்டது. ஒரு போட்டியில் மட்டும் விளையாடி 12 ரன்களை குவித்த இவர், மற்ற போட்டிகளில் ரசிகராக தான் அமர்ந்து கொண்டிருந்தார். எனவே அடுத்த ஆண்டு இவர் மஞ்சள் உடையை அணிவது சற்று கடினம் தான்.

4. மார்க் வுட்:- தனது முதல் ஐபிஎல் தொடரில் விளையாடிய இந்த இங்கிலிஷ் வீரர், தனது முதல் போட்டியிலேயே தனது பெயரில் 49 ரன்களை சேர்ந்தார். ஆனால் பேட்டிங்கில் அல்ல பந்துவீச்சில். பெயருக்கு ஏற்றார் போல இவரது பந்தும் கட்டை போட்டுக் கொண்டிருந்தது. இவரது வள்ளல் தன்மையான பந்து வீச்சால் இவருக்கு ஒரு போட்டிக்கு பின்னர் பந்து வீசும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
Mark-Wood

5.இம்ரான் தாஹிர்:- இவர் சென்னை அணியில் பந்து வீசுவதை மறந்து விட்டு தமிழ் கற்க சென்றுவிட்டார். இதனால் இவரது பந்து வீச்சின் வேகம் முழுவதுமாக பந்து சுழல மறுத்துவிட்டது. மஞ்சள் அணிக்காக 6 போட்டிகளில் விளையாடிய இவர் போட்டிக்கு 1 விக்கெட் என்ற விகிதத்தில் 6 விக்கெடுகளை கைப்பற்றினார். இதனால் இவருக்கு மற்ற போட்டிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்டு மீண்டும் தமிழை கற்க சொல்லிவிட்டது போல.

Advertisement