இவரை சேத்தது தான் கோலி பண்ண பெரிய தப்பு. இந்திய அணியின் தோல்விக்கு அதுவே காரணம் – இன்சமாம் பேட்டி

Inzamam

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் உலக கோப்பை தொடரின் லீக் போட்டி நடைபெற்றது. இதுவரை உலக கோப்பை தொடரில் நடந்த போட்டிகளில் இந்திய அணி ஒரு முறை கூட பாகிஸ்தான் அணியிடம் தோற்றது கிடையாது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி தோல்வியை சந்தித்தது பெருமளவு விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக இந்திய அணி இந்த போட்டியில் ஒரு தெளிவு இல்லாமல் விளையாடுவது போல் தெரிந்தது.

INDvsPAK

இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது 20 ஓவர்கள் முடிவில் 151 ரன்களை மட்டுமே குவிக்க அடுத்ததாக விளையாடிய பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் எந்த ஒரு இடத்திலும் பாகிஸ்தான் வீரர்களின் ரன் குவிப்பை தடுக்க முடியவில்லை. அதேபோல் அவர்களது விக்கெட்டையும் வீழ்த்த முடியவில்லை.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி பெற்ற தோல்விக்கு என்ன காரணம் ? என்பது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான இன்சமாம் உல் ஹக் தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு தெளிவின்றி களமிறங்கியது. விராட் கோலி பிளேயிங் லெவனை தேர்வு செய்ததில் தவறு செய்துள்ளார்.

pandya

ஏனெனில் ஹார்டிக் பாண்டியா உடன் களமிறங்கியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி இருந்ததாக நான் கருதுகிறேன். அதுவே அவர்களுக்கு பெரும் பின்னடைவை கொடுத்தது. பாண்டியா பந்து வீசாமல் இருப்பதனால் அவருக்கு பதிலாக வேறு ஒரு வீரரை சேர்ப்பதே அணிக்கு கூடுதல் பலத்தை தரும். ஆனால் பாண்டியாவுடன் களமிறங்கும் போது இந்திய அணிக்கு பிரச்சனை ஏற்படுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : இவங்க 2 பேர் ஹெல்ப் இல்லாம விராட் கோலியால் கோப்பையை கைப்பற்ற முடியாது – ஜான்டி ரோட்ஸ் ஓபன்டாக்

ஆனால் பாபர் அசாம் அது போன்ற எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் ஆடும் லெவன் அணியை தெளிவாக தெரிவு செய்திருந்தார். பிளேயிங் லெவனை சரியாக செய்ததாலே அவர் அந்த போட்டியை வென்று காண்பித்தார். இந்திய அணியை பொறுத்தவரை கோலி டீமில் ஹர்திக் பாண்டியாவை தேர்வு செய்து விளையாட வைத்தது தான் மிகப்பெரிய பின்னடைவாக இந்திய அணிக்கு மாறியது என இன்சமாம் உல் ஹக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement