யார பாத்து என்ன கேள்வி கேட்டிங்க? கோலிய பாத்தா எப்படி தெரியுது – சப்போர்ட் செய்த இன்சாமாம் உல் ஹக்

Inzamam
- Advertisement -

இந்திய அணி நியூசிலாந்து அணிக்கெதிராக 2 டெஸ்ட் போட்டியிலும் தோல்வி அடைந்தது. இதற்கு காரணம் இந்திய அணித்தின் பேட்டிங் சொதப்பல் தான் காரணம் என்று கேப்டன் விராட் கோலியே ஒப்புக்கொண்டார். இந்த தொடரில் கோலி 100க்கும் குறைவாகவே ரன்கள் எடுத்தார். மேலும், ஒவ்வொருமுறை தனது விக்கெட்டை இழக்கும் போதும் ஏதோ ஆடத்தெரியாதது போல ஆடிக்கொண்டிருந்தார்.

Kohli

- Advertisement -

இதன்காரணமாக பல முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் விராட் கோலியின் டெக்னீக் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் கோலி மீதான இந்த விமர்சனம் குறித்து கடுப்பான இன்சமாம் உல் ஹக் விராட் கோலிக்கு ஆதரவு தெரிவித்து பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது : அவருக்கு நான் எந்த ஆலோசனையும் கூற விரும்பவில்லை. இந்த சரிவை நினைத்து கவலைப்படவேண்டாம் என்பதே நான் அவருக்கு கூறும் ஆலோசனையாக இருக்கும். அவரது பேட்டிங் டெக்னீக் குறித்து கேள்வி எழுப்புகிறார்கள். எப்படி ஒருவர் 70 சதங்கள் அடித்த பின்னும் கேள்வி எழுப்பிக்கிறீர்கள்.

Kohli

அவரிடம் எழுப்ப கூடிய கேள்வி இது கிடையாது. அவரின் பேட்டிங் குறித்த எந்த குறையும் நாம் சுட்டிக்காட்ட முடியாது அந்த அளவிற்கு சரியான கிரிக்கெட்டை அவர் பல ஆண்டுகளாக வெளிப்படுத்தி வருகிறார். விராட் கோலி மனவலிமை வாய்ந்த வீரர் அவர் மீண்டு வருவார் என்று கூறியுள்ளார் இன்சமாம் உல் ஹக்

Advertisement