நான் பேட்டிங்கில் தடுமாறியபோது என்னை காற்றியவர் இவர்தான் – இன்சமாம் ஓபன் டாக்

Inzamam
- Advertisement -

இந்தியா பாகிஸ்தான் வீரர்கள் என்றாலே எப்போதும் களத்தில் கடுமையாக மோதிக் கொள்வார்கள் என்று தான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் தற்போது முன்னாள் இந்திய ஜாம்பவான் ஒருவர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்கின் கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரே ஒரு அறிவுரை மூலம் காப்பாற்றியுள்ளார்.

- Advertisement -

இந்த சம்பவம் குறித்து தற்போது இன்சமாம் உல் ஹக் அவரே கூறியுள்ளார். குறிப்பாக சுனில் கவாஸ்கர் ஓய்வு பெற்ற பின்னர்தான் பாகிஸ்தான் அணிக்கு அறிமுகமானார் இன்சமாம் உல் ஹக். அதற்கு பின்னர் பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இது தான் இவருக்கு முதல் தொடர். இதன் காரணமாக இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை சரியாக எதிர்கொள்ள முடியவில்லை

அப்போது இங்கிலாந்தில் இருந்த சுனில் கவாஸ்கரிடம் அறிவுரை கேட்டுள்ளார் இன்சமாம் உல் ஹக் எனக்கு ஷார்ட் பிட்ச் பந்துகளை பார்த்தாலே பயமாக இருக்கிறது. எப்போதும் அந்த பந்துகள் தான் என் கண்ணுக்கு தெரிந்து கொண்டே இருக்கிறது. இது எனக்கு பெரிய பிரச்சினையாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

Inzamam

அதற்கு சுனில் கவாஸ்கர்.. எப்போதும் பேட்டிங் செய்யும்போது ஷார்ட் பிட்ச் பந்துகளை பற்றி சிந்தித்துக்கொண்டே இருக்காதே. அதைப்பற்றி யோசித்துக்கொண்டே இருக்கும்போது தான் மாட்டிக் கொள்கிறாய். இயல்பாகவே விளையாடிக் கொண்டிரு, ஷார்ட் பிட்ச் பந்துகள் வரும் என்றால் உனக்கு இயல்பாகவே தெரியவரும் .

gavaskar

அதற்கான ஆட்டத்தை ஆடு குறிப்பாக வலைப்பயிற்சியில் அதிகமாக ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசி பயிற்சி எடு என்று கூறியுள்ளார் சுனில் கவாஸ்கர். இந்த உதவி அவரது கிரிக்கெட் வாழ்க்கையை காப்பாற்றியதாக தற்போது பேசியுள்ளார் இன்சமாம் உல் ஹக்.

Advertisement