டி20 உலகக்கோப்பையை ஜெயிக்கப்போவது இவங்க தான். பாகிஸ்தான் இல்ல – இன்சமாம் உல் ஹக் ஓபன்டாக்

Inzamam
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் தற்போது ஐசிசி நடத்தும் டி20 உலகக் கோப்பை தொடரானது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் தகுதிச் சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வர சூப்பர் 12 ஆட்டங்களில் நாளை முதல் (அக்டோபர் 23) துவங்க இருக்கின்றன. இந்நிலையில் இந்த தொடரில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றப்போவது யார் ? என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Cup

- Advertisement -

அந்த வகையில் தற்போது பாகிஸ்தான் அணியை சேர்ந்த முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் இந்தத் தொடரில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றப்போவது யார் ? என்பது குறித்த தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் இந்த உலக கோப்பை தொடரில் கோப்பையை கைப்பற்றும் அணியாக இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் போன்ற அணிகள் பார்க்கப்படுகின்றன.

இந்நிலையில் இந்த சாம்பியன் கோப்பையை கைப்பற்ற போகும் அணி எது என்பது குறித்து பேசிய இன்சமாம் கூறுகையில் : எந்த ஒரு தொடரிலும் குறிப்பிட்ட ஒரு அணிதான் வெற்றிபெறும், கோப்பையை கைப்பற்றும் என்று கூறுவது கடினம். ஆனால் எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதை கூற முடியும். அந்த வகையில் பார்க்கும் போது மற்ற அணிகளை காட்டிலும் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு மிக அதிகம்.

shami

ஏனெனில் ஐக்கிய அரபு அமீரக மைதானங்களில் இந்திய அணி வீரர்கள் தற்போது தொடர்ச்சியாக ஐபிஎல் தொடரில் விளையாடி உள்ளனர். அதுமட்டுமின்றி இந்திய வீரர்களில் பலர் அனுபவம் வாய்ந்த வீரர்கள். அதனால் அவர்கள் இக்கட்டான சூழலை கூட கடந்து விளையாட முடியும் என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி வீழ்த்திய விதம். இந்த தொடரில் அவர்கள் எவ்வாறு செயல்படப் போகிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணம்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய வீரரான அவர் ரொம்ப டேஞ்சர். அவர்கிட்ட கொஞ்சம் உஷாரா இருக்கனும் – பாக் கோச் மேத்யூ ஹைடன் பேட்டி

ஏனெனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 153 ரன்கள் சேசிங் செய்யும்போது விராட் கோலி இல்லாமலேயே இந்திய அணி எளிதாக அந்த இலக்கை விரட்டியது. இதன் காரணமாக நிச்சயம் இந்திய அணி இந்த கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது எனவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement