இந்திய வீரரான அவர் ரொம்ப டேஞ்சர். அவர்கிட்ட கொஞ்சம் உஷாரா இருக்கனும் – பாக் கோச் மேத்யூ ஹைடன் பேட்டி

Hayden
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ள போட்டியாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி மாறி உள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று 24-ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் டி20 உலக கோப்பை தொடரில் மோதுகின்றன. இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. மேலும் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பயணத்தை தொடர விரும்பும். அதேபோன்று இந்திய அணியை உலக கோப்பையில் வீழ்த்தி தங்களது ஆதிக்கத்தை ஆரம்பிக்க பாகிஸ்தான் அணியும் முயற்சிக்கும்.

pak 1

- Advertisement -

இதன் காரணமாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான போட்டி படு சுவாரசியத்தை தற்போது உண்டாக்கியுள்ளது. இரு அணிகளுக்குமே வெற்றிவாய்ப்பு சமமாக உள்ள நிலையில் இந்த போட்டி குறித்து ஏகப்பட்ட கருத்துக்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது சமீபத்தில் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் இந்த இந்தியா பாகிஸ்தான் போட்டி குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ராகுல் மிகவும் டேஞ்சரான பேட்ஸ்மேன். அவரை விரைவில் வீழ்த்தினால்தான் பாகிஸ்தான் அணிக்கு வெற்றி வாய்ப்பு என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் தொடர்ந்து கூறுகையில் : ராகுலின் ஆட்டத்தை நான் ஆரம்பம் முதலே பார்த்துவருகிறேன்.

rahul 2

அவர் டி20 போட்டிகளில் எப்பேர்ப்பட்ட அதிரடி ஆட்டக்காரர் என்பது எனக்கு தெரியும். அதே போன்று ரிஷப் பன்ட்டும் வேகமாக ரன்களை குவிக்க கூடியவர். அவரது நேச்சுரல் ஆட்டமே அடித்து விளையாடுவதுதான். எனவே அவர்கள் இருவரையும் பாகிஸ்தான் அணி சற்று கவனித்து விளையாட வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்தியா பாகிஸ்தான் : யார் என்ன சொன்னாலும் இதை தடுக்க முடியாது – பி.சி.சி.ஐ சார்பில் வெளியான தகவல்

அது தவிர இந்திய அணியின் ஆலோசகராக இருக்கும் தோனி எவ்வளவு பெரிய வீரர் என்பது நாம் அறிந்ததே. அவருக்கு நல்ல ஆளுமைத் தன்மை உள்ளதால் அதுவும் நிச்சயம் இந்திய அணிக்கு பயனுள்ளதாக அமையும். எனவே இந்த போட்டியை சற்று ஜாக்கிரதையாக பாகிஸ்தான் அணுகவேண்டும் என்றும் ஹெய்டன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement