இந்தியா பாகிஸ்தான் : யார் என்ன சொன்னாலும் இதை தடுக்க முடியாது – பி.சி.சி.ஐ சார்பில் வெளியான தகவல்

Pak
- Advertisement -

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் உலகக் கோப்பை டி20 தொடரில் 24-ஆம் தேதி நடைபெறும் போட்டியில் மோத இருக்கின்றன. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி நடத்தும் இந்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடுவதால் தற்போது இந்தியா முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மத்திய மந்திரி கிரிராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் : இந்தியா-பாகிஸ்தான் இடையே தற்போது சுமூகமான உறவு இல்லை.

pak 1

- Advertisement -

காஷ்மீரில் அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டு வருகிறார்கள். இந்நேரத்தில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் விளையாட கூடாது இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தனது கருத்தினை கூறியிருந்தார். அதேபோல் மற்றொரு மந்திரி கூறுகையில் : டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடவே கூடாது என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் ஒருவர் கூறுகையில் :

இந்தியா பாகிஸ்தான் இடையேயான உலகக் கோப்பை போட்டி ரத்து செய்ய வேண்டும் என்றும் தனது கருத்தை தெரிவித்திருந்தார். இப்படி இந்தியா முழுவதும் இந்த போட்டிக்கு எதிர்ப்பு அதிக அளவில் எழுந்துவர பிசிசிஐ இந்த இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி குறித்த தங்களது கருத்தினை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில் : ஜம்மு காஷ்மீரில் மக்கள் கொல்லப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். தீவிரவாதிகளின் இந்த செயலுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Pakistan

ஆனால் இந்த டி20 உலகக் கோப்பை தொடரை ஐசிசி உடன் நாங்கள் ஒப்பந்தம் செய்துள்ளோம். மேலும் இந்த தொடரில் எந்த அணிக்கு எதிராக போட்டி நடைபெற்றாலும் பங்கேற்போம் என்று உறுதி அளித்துள்ளோம். எனவே நிச்சயம் இந்தியா பாகிஸ்தான் போட்டியில் யார் என்ன சொன்னாலும் தற்போது ரத்து செய்ய முடியாது. ஐசிசி-யிடம் அளித்த வாக்குறுதிப்படி நாங்கள் இந்த போட்டியில் விளையாட வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க : பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் விளையாட தமிழக வீரரான இவருக்கு வாய்ப்பு அதிகம் – வெளியான தகவல்

இந்திய கிரிக்கெட் வாரியம் எப்போதும் தாங்கள் அளித்த வார்த்தைகளை மீறாது. எனவே எந்த நாட்டு அணியுடன் விளையாட ஐசிசி ஒப்பந்தம் செய்து இருந்தாலும் நாங்கள் இந்த தொடரில் விளையாடியாக வேண்டும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். இதன் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement