பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் விளையாட தமிழக வீரரான இவருக்கு வாய்ப்பு அதிகம் – வெளியான தகவல்

ashwin
- Advertisement -

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இந்த டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 ஆட்டங்களில் நேரடியாக விளையாடுகிறது. குரூப் 2-ல் இடம் பெற்றுள்ள இந்திய அணி தங்களது முதலாவது போட்டியில் 24-ஆம் தேதி பாகிஸ்தான் அணியையும், அதனை தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிராக 31-ஆம் தேதியும், நவம்பர் 3ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணியுடனும், தகுதிச்சுற்று அணிகளுடன் 5 மற்றும் 8 ஆகிய தேதிகளில் விளையாட இருக்கிறது.

IND

இந்த போட்டிகளுக்கு முன்பு தற்போது நடைபெற்று முடிந்த இரண்டு பயிற்சிப் போட்டியிலும் இந்திய அணியின் வீரர்கள் சிறப்பாக விளையாடி இரண்டு போட்டியையும் கைப்பற்றியிருந்த நிலையில் இந்த பயிற்சி ஆட்டத்தின் மூலம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடும் பிளேயிங் லெவன் கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது என்றே கூறலாம். அதன்படியே துவக்க வீரர்களாக ராகுல் மற்றும் ரோஹித் ஆகியோர் களம் இறங்குவார்கள்.

- Advertisement -

பின்னர் 3,4 ஆகிய இடங்களில் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இறங்குவார்கள். 5 ஆவது வீரராக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்டும், 6 மற்றும் 7 ஆகிய இடங்களில் ஆல் ரவுண்டர் ஜடேஜா மற்றும் ஹார்டிக் பாண்டியா விளையாடுவார்கள் என்பது உறுதியாகி உள்ளது. அதே போன்று தற்போது பவுலிங்கை பொருத்தவரை தமிழக பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் நிச்சயம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவார் என்று தெரிகிறது.

ashwin-2

ஏனெனில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் பவர் பிளே ஓவரில் பந்து வீசிய அஷ்வின் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். மேலும் அவரது அனுபவம் நிச்சயம் பாகிஸ்தான் அணிக்கெதிராக கைகொடுக்கும் என்பதால் நிச்சயம் அஷ்வின் இடம்பெறுவார் என்று தெரிகிறது. அதன்படி சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோரும் வேகப்பந்து வீச்சாளர்களை பொறுத்தவரை பும்ரா, ஷமி, புவனேஸ்வர் குமார் ஆகியோர் விளையாடுவார்கள் என்றும் தெரிகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : பாகிஸ்தான் டீமை இந்தியா தோக்கடிக்கணுனா இவரை தூக்கியே ஆகனும் – மான்டி பனேசர் கருத்து

அதேபோன்று இந்த தொடரில் இடதுகை பேட்ஸ்மேன்கள் அதிகம் இருக்கும் அணிகளுக்கு எதிராக அஷ்வினும் அப்படி இல்லை என்றால் ராகுல் சாஹரும் மாற்றி மாற்றி விளையாடுவார்கள். ஒரு பக்கத்தில் வருண் சக்கரவர்த்தியும் போட்டி களத்தில் உள்ளார். பாகிஸ்தான் அணிக்கெதிரான உத்தேச பிளேயிங் லெவன் இதோ :

1) ரோஹித் சர்மா, 2) கே.எல் ராகுல், 3) விராட் கோலி, 4) சூர்யகுமார் யாதவ், 5) ரிஷப் பண்ட், 6) ஹார்டிக் பாண்டியா, 7) ரவீந்திர ஜடேஜா, 8) ரவிச்சந்திரன் அஷ்வின், 9) பும்ரா, 10) முகமது ஷமி, 11) புவனேஷ்வர் குமார்.

Advertisement