பாகிஸ்தான் டீமை இந்தியா தோக்கடிக்கணுனா இவரை தூக்கியே ஆகனும் – மான்டி பனேசர் கருத்து

Pak
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் மிகப்பெரிய போட்டியாக ரசிகர்கள் மத்தியில் அதிகளவு பேசப்பட்டு வரும் போட்டியான இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி இன்னும் இரு தினங்களில் நடைபெறவுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி 24-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த போட்டி குறித்த தங்களது கருத்துக்களை முன்னாள் வீரர்கள் பலரும் அளித்து வருகின்றனர்.

pak

ஏற்கனவே உலக கோப்பை தொடர்களில் இந்திய அணி தொடர்ச்சியாக பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வருவதால் நிச்சயம் இம்முறையும் இந்திய அணி ஜெயிக்கும் என்று ஒரு சிலரும், பாகிஸ்தான் அணி தற்போது மிகப்பெரிய வலுவான அணியாக மாறியுள்ளது எனவே பாகிஸ்தான் அணி இந்திய அணியை வீழ்த்தும் என்று ஒரு சிலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் தற்போது இங்கிலாந்து அணியை சேர்ந்த முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான மான்டி பனேசர் இந்தியா-பாகிஸ்தான் மோதும் இந்த போட்டி குறித்து பேசுகையில் : இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்த வேண்டும் என்றால் நிச்சயம் அந்த அணியின் கேப்டன் பாபர் அசாமை துவக்கத்திலேயே வீழ்த்த வேண்டும். ஏனெனில் பாபர் அசாம் மற்றும் ஷாகின் அப்ரிடி அந்த அணியின் முக்கிய வீரர்களாக நிச்சயம் இருப்பார்கள்.

பாபர் அசாம் பேட்டிங்கில் நிலைத்து விட்டால் ரன்களை குவித்து விடுவார். அதேபோன்று சாஹீன் அப்ரிடி இடதுகை வேகப்பந்து வீச்சாளர் என்பதால் ராகுல், கோலி, ரோகித் ஆகியோருக்கு துவக்க ஓவர்களிலேயே சிரமத்தை அளிப்பார் என்று கருதுகிறேன். எனவே பாபர் அசாம் விக்கெட்டை விரைவில் வீழ்த்தினாலே இந்திய அணி வெற்றி பெறும் என்று கூறினார். அதுமட்டுமன்றி தொடர்ந்து பேசிய அவர் : தற்போது உள்ள நிலைமையில் பாகிஸ்தான் அணியை விட இந்திய அணி பலம் வாய்ந்த அணியாக இருந்தாலும் பாகிஸ்தான் அணி மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : உலகக்கோப்பையில் சில போட்டிகளில் வில்லியம்சன் விளையாடமாட்டார் – நியூசி பயிற்சியாளர் அறிவிப்பு

உலகின் எந்த ஒரு அணியாக இருந்தாலும் அவர்களை வீழ்த்தும் வலிமையும் அவர்களிடம் உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் எப்போதுமே பாகிஸ்தான் சிறப்பாக விளையாடி வருவதால் அன்றைய நாள் பாகிஸ்தான் அணிக்கு சாதகமாக அமைந்தால் பாகிஸ்தான் எப்பேர்பட்ட அணியும் விழ்த்தும் வலிமை உடையது என்று பனேசர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement