உலகக்கோப்பையில் சில போட்டிகளில் வில்லியம்சன் விளையாடமாட்டார் – நியூசி பயிற்சியாளர் அறிவிப்பு

Gary
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்கள் பலராலும் பெரிய ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஐசிசி டி20 வேர்ல்டு கப் கடந்த 17-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. தற்போது தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் வேளையில் முன்னணி அணிகள் போதும் சூப்பர் 12 – ஆட்டங்கள் இன்னும் இரு தினங்களில் ஆரம்பமாக உள்ளது. இந்த தொடரில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற முன்னணி அணிகள் அனைத்தும் ஆயத்தமாகி வருகின்றன.

Cup

- Advertisement -

அந்த வகையில் ஏற்கனவே 2019-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை நூலிழையில் தவற விட்ட நியூசிலாந்து அணி இம்முறை டி20 உலகக் கோப்பையை கைப்பற்ற மும்முரமாக தயாராகி வருகிறது. இந்நிலையில் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் இந்தத் தொடரில் சில போட்டிகளில் விளையாட முடியாமல் போக வாய்ப்பு உள்ளதாக அந்த அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

கேன் வில்லியம்சனின் முழங்கையில் சில தொந்தரவுகள் உள்ளன. இதன் காரணமாக அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் முன்னெச்சரிக்கை காரணமாக இறங்காமல் இருந்தார். அவருக்கு முறையான ஓய்வு தற்போது தேவைப்படுகிறது. அப்படி அவர் ஓய்வு எடுத்துக் கொண்டால் நிச்சயம் தேறிவிடுவார் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது. இதன் காரணமாக இந்த உலக கோப்பை தொடரில் முதல் சில போட்டிகளை அவர் தவற விடும் வாய்ப்புகள் உண்டு என்று தெரிவித்தார்.

Williamson

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : வில்லியம்சன் பேட்டிங் செய்வதில் அற்புதமான திறன் படைத்தவர் அவருக்கு கொஞ்சம் ஓய்வு தற்போது அவசியம் அவ்வளவுதான். மற்றபடி அவர் இந்த தொடரில் சில போட்டிகளை தவறவிட்டாலும், முக்கிய போட்டிகளில் தனது பங்களிப்பை கண்டிப்பாக கொடுப்பார் என நம்புகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : ஐ.பி.எல் 2022 : புதிய அணியை வாங்க ஆர்வம் காட்டும் பிரபல கால்பந்து அணி – இவங்களுக்கு பேன்ஸ் அதிகமாச்சே

இந்த உலகக் கோப்பை தொடருக்கு முன்னர் தற்போது நடைபெற்றுவரும் பயிற்சி ஆட்டத்தில் கூட கேன் வில்லியம்சன் அணியில் களமிறங்காமல் வெளியில் அமர்ந்தபடி போட்டியை ரசித்ததும், ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியிலும் அவர் விளையாடாததும் குறிப்பிடத்தக்கது.

Advertisement