சும்மா இருக்கும் ஜாதவிற்கு பதிலாக கோப்பைகளை வென்ற கேப்டானான இவரை சேருங்கள் – ரசிகர்கள் புலம்பல்

Jadhav

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

Wi

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியும், போட்டியை வென்று தொடரை சமன் செய்ய இந்திய அணியும் கடும் சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இன்றைய போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.

இந்நிலையில் இந்த இந்த போட்டியில் 34 வயது வீரரான கேதார் ஜாதவை அணியில் இருந்து நீக்கும்படி ரசிகர்கள் தங்களது கருத்துக்களை இணையத்தில் பதிவு வருகின்றனர். ஏனெனில் வயது மூத்த வீரரும் பின்வரிசையில் இறங்கி அவ்வளவாக வாய்ப்பும் கிடைக்காமல், ரன்களும் அடிக்காமல் இருக்கும் இவருக்கு பதிலாக 30 வயதான இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மனிஷ் பாண்டேவை களம் இறக்கலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Kedar-Jadhav

அதற்கான காரணம் யாதெனில் சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற உள்ளூர் தொடர்களான விஜய் ஹசாரே மற்றும் சையத் முஷ்டக் அலி கோப்பை போன்றவற்றை கர்நாடக அணியின் கேப்டனாக பங்கேற்று வெற்றி பெற்று கொடுத்தது மட்டுமின்றி அந்த இரு தொடர்களில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இன்னும் அணியில் நிரந்தர இடம் இன்றி போராடி வருகிறார் மனிஷ் பாண்டே.

- Advertisement -

Pandey

கடந்த 2015ம் ஆண்டு இந்திய அணிக்கு அறிமுகமான அவர் கடந்த நான்கு ஆண்டுகளாகவே நிலையான இடம் இல்லாமல் அணிக்கு வருவதும் போவதுமாக இருக்கிறார். ஆனால் அவருக்கு தேவையான வாய்ப்புகளை கொடுக்கும் பட்சத்தில் அவர் அணியில் நிரந்தர இடம் பெற அதிக வாய்ப்புள்ளது. எனவே திறமை வாய்ந்த இவருக்கு வாய்ப்பு கொடுத்து வயது முதிய வீரரான ஜாதவை அணியில் இருந்து நீக்குங்கள் என்ற விமர்சனங்களும் இணையத்தில் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.