உலககோப்பை 2022 : பரம எதிரி பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்குமா இந்தியா – முழு விவரம்

IND-Womens
- Advertisement -

ஐசிசி மகளிர் உலககோப்பை 2022 கிரிக்கெட் தொடர் மார்ச் 4ஆம் தேதியன்று நியூசிலாந்து நாட்டில் கோலாகலமாக தொடங்கியது. இதில் போட்டியை நடத்தும் நியூசிலாந்து நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட உலகின் டாப் 8 அணிகள் கோப்பைக்காக பலப்பரிட்ச்சை நடத்தி வருகின்றன. லீக் சுற்று மற்றும் நாக் அவுட் சுற்று என 2 வகையான சுற்றுகளை கொண்ட இந்த உலக கோப்பையில் பைனல் உட்பட மொத்தம் 31 போட்டிகள் நடைபெற உள்ளன.

ICC Women's World Cup 2022

- Advertisement -

இதை அடுத்து மார்ச் 4ஆம் தேதி அன்று துவங்கிய முதல் போட்டியில் போட்டியை நடத்தும் நியூசிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்டது. மௌன்ட் மௌங்கனி நகரில் நடந்த அந்த போட்டி கடைசி ஓவர் வரை பரபரப்பாக சென்ற வேளையில் வெறும் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற வெஸ்ட் இண்டீஸ் நியூசிலாந்துக்கு அதன் சொந்த மண்ணில் ஷாக் கொடுத்தது.

இந்தியா – பாகிஸ்தான்:
இப்படி முதல் போட்டியே மிகவும் திரில்லாக துவங்கிய இந்த உலக கோப்பையில் மித்தாலி ராஜ் தலைமையிலான இந்தியா தனது முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை எதிர் கொள்கிறது. பொதுவாகவே இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டிகள் என்றால் அதில் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பதால் இந்தப் போட்டிக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த ரசிகர்கள் மட்டுமல்லாது உலக அளவில் இருக்கும் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

crickwomens

நியூசிலாந்தில் உள்ள மௌன்ட் மௌங்கனி நகரில் நடைபெறும் இந்தப் போட்டி மார்ச் 6ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 6.30 மணிக்கு துவங்க உள்ளது. இந்த போட்டியை இந்தியாவில் இருக்கும் ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட் தொலைக்காட்சி மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் ஆப் வாயிலாக கண்டுகளிக்கலாம்.

- Advertisement -

முன்னோட்டம்:
ஆடவர் கிரிக்கெட்டை போலவே எல்லை பிரச்சனை காரணமாக இந்தியா – பாகிஸ்தான் மகளிர் அணிகளும் சமீப காலங்களாக நேருக்கு நேர் கிரிக்கெட் தொடர்களில் மோதுவதில்லை. மாறாக இதுபோன்ற ஐசிசி உலக கோப்பை தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றன. எனவே இந்த முக்கியமான போட்டியில் வெற்றி பெற்று உலக கோப்பையை வெற்றியுடன் துவக்க இரு நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகளும் போராடுவார்கள் என்பதால் இந்த போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.

Mithali 2

இந்திய அணியை பொறுத்தவரை மித்தாலி ராஜ், ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்பிரீட் கவூர், ஷபாலி வர்மா என நிறைய உலகத்தரம் வாய்ந்த வீராங்கனைகள் அடங்கிய அணியாக காட்சி அளிக்கிறது. அதேபோல் இந்த உலகக் கோப்பைக்கு தயாராகும் வண்ணம் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. எனவே பாகிஸ்தானுக்கு எதிரான இந்த போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவின் தலையை நிமிர செய்வார்கள் என நம்பலாம். மறுபுறம் இந்தியாவுக்கு சவால் அளிக்கும் அளவுக்கு தரமான வீராங்கனை கொண்டுள்ள பாகிஸ்தான் அணி இந்த உலகக் கோப்பைக்கான பயிற்சிப் போட்டியில் நியூசிலாந்தை தோற்கடித்த போதிலும் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது. இருப்பினும் இந்தியாவுக்கு எதிரான இந்த போட்டியில் எப்படியாவது வெற்றி பெற அந்த அணி முயற்சிக்கும் என எதிர்பார்க்கலாம்.

- Advertisement -

வரலாற்று புள்ளிவிவரம்:
1. மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இதுவரை மொத்தம் 10 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். அந்த 10 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா வலுவான அணியாக திகழ்கிறது. மறுபுறம் இந்தியாவுக்கு எதிராக ஒரு ஒருநாள் போட்டியில் கூட பாகிஸ்தான் மகளிர் அணி வென்றதே கிடையாது.

womens ind

2. அதேபோல் உலக கோப்பை வரலாற்றில் இவ்விரு அணிகளும் இதற்கு முன் 2 போட்டிகளில் பலப்பரீட்சை நடத்தியுள்ளன. அந்த 2 போட்டியிலும் வெற்றி பெற்ற இந்தியா உலக கோப்பையிலும் பாகிஸ்தானை விட வலுவான அணியாக சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

3. உலக கோப்பை வரலாற்றில் இந்த இரு அணிகள் மோதிய போட்டியில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் : இந்தியா – 169/9, 2017.

இதையும் படிங்க : இறப்பதற்கு 12 மணி நேரத்திற்கு முன்பாக ஷேன் வார்ன் பகிர்ந்த இரங்கல் செய்தி – வைரலாகும் கடைசி பதிவு

4. அதேபோல் உலகக் கோப்பை வரலாற்றில் இந்த 2 அணிகள் மோதிய போட்டிகளில் பதிவு செய்யப்பட்ட மிகக்குறைந்த ஸ்கோர் : பாகிஸ்தான் 57க்கு ஆல் அவுட், 2009.

5. உலககோப்பைகளில் இந்தியா பாகிஸ்தான் மோதிய போட்டிகளில் ஒரு போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்து வீராங்கனை : பூனம் ரௌட் – 47 ரன்கள், 2017.

6. உலக கோப்பைகளில் இந்த 2 அணிகள் மோதிய போட்டிகளில் ஒரு போட்டியில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த வீராங்கனை : 5/18 – ஏக்த்டா பிஸ்ட், 2017.

Advertisement