IND vs ZIM : ஜிம்பாப்வே அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரை எந்த சேனலில் பார்க்கலாம்? – விவரம் இதோ

INDvsZIM
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது அங்கு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் என இரண்டையும் கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து முதன்மை வீரர்களை கொண்ட இந்திய அணி இம்மாத இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை தொடருக்கு பயணிக்க இருப்பதால் ஷிகார் தவான் தலைமையிலான இரண்டாம் தர இந்திய அணி அடுத்த வாரம் ஜிம்பாப்வேவில் துவங்க உள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது.

INDvsZIM

- Advertisement -

இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே ஷிகார் தவான் தலைமையில் அறிவிக்கப்பட்ட வேளையில் இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது எந்தெந்த தேதிகளில்? எந்த மைதானத்தில் நடைபெறுகிறது? எந்த சேனலில் பார்க்கலாம்? என்பது குறித்த தெளிவான தகவலை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கி உள்ளோம். அதன்படி ஜிம்பாப்வே அணியானது சமீபத்தில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்திருந்தாலும், அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிரான தொடரை இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.

அதே வேளையில் இந்திய அணியும் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திவிட்டு அங்கு செல்வதால் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த ஒருநாள் தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரானது ஆகஸ்ட் 18-ஆம் தேதி துவங்கிய ஆகஸ்ட் 22-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

Shardhul Thakur India Dhawan Shreyas Iyer

அதன்படி ஆகஸ்ட் 18-ஆம் தேதி முதல் போட்டியும், ஆகஸ்ட் 20-ஆம் தேதி இரண்டாவது போட்டியும், ஆகஸ்ட் 22-ஆம் தேதி மூன்றாவது ஒருநாள் போட்டியும் நடைபெற இருக்கிறது. இந்த மூன்று போட்டிகளுமே ஜிம்பாப்வேயில் உள்ள ஹராரே நகரில் நடைபெற இருக்கிறது. இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஒளிபரப்பும் உரிமத்தை சோனி குழுமம் வாங்கியுள்ளதால் சோனி குழும தொலைக்காட்சிகளில் இந்த போட்டிகளை கண்டு களிக்கலாம்.

- Advertisement -

அதோடு தமிழ் ரசிகர்களுக்காக தமிழ் வர்ணனையிலும் இந்த தொடரானது ஒளிபரப்பாக இருக்கிறது. அது மட்டும் இன்றி OTT-யில் சோனி லைவ் என்கிற செயலி மூலம் இந்த தொடரை கண்டுகளிக்கலாம். இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் இதோ :

இதையும் படிங்க : ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகமுறை 300க்கும் மேற்ப்பட்ட ரன்களை விளாசிய டாப் 5 அணிகளின் பட்டியல்

1) ஷிகர் தவான், 2) ருதுராஜ் கெய்க்வாட், 3) ஷுப்மான் கில், 4) தீபக் ஹூடா, 5) ராகுல் திரிபாதி, 6) இஷான் கிஷன், 7) சஞ்சு சாம்சன், 8) வாஷிங்டன் சுந்தர், 9) ஷர்துல் தாக்கூர், 10) குல்தீப் யாதவ், 11) அவேஷ் கான், 12) பிரசித் கிருஷ்ணா, 13) முகமது சிராஜ், 14) தீபக் சாஹர், 15) அக்சர் படேல்.

Advertisement