நியூசி டெஸ்ட் தொடர் இந்திய நேரப்படி இத்தனை மணிக்கு தான் துவங்குமாம். அப்போ எப்படி பாக்குறது ? – ரொம்ப கஷ்டம் தான்

INDvsNZ
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 21ம் தேதி வெலிங்டன் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த டெஸ்ட் தொடர் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் அடங்குவதால் இந்த தொடரில் இந்திய அணி வெல்ல முனைப்புக் காட்டும்.

IND

- Advertisement -

நியூசிலாந்துக்கும், இந்திய நாட்டிற்கும் இடையே உள்ள அதிக நேர வித்தியாசம் காரணமாக டி20 போட்டிகளை நாம் 11.30 மணிக்கும், ஒருநாள் போட்டிகளை காலையில் 7.30 மணிக்கும் நாம் இந்த தொடரில் கண்டிருப்போம்.

அதனைத் தொடர்ந்து தற்போது இந்த தொடருக்கான இந்திய நேரம் தான் இந்த பதிவில் நாங்கள் தெரிவிக்க இருக்கிறோம். அதன்படி முதல் டெஸ்ட் போட்டி 21 ஆம் தேதி வெலிங்டனிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி க்ரிஸ்ட் சர்ச்சிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போட்டி இந்திய நேரப்படி அதிகாலை 4 மணிக்கு டாஸ் போடப்பட்டு 4.30 போட்டி துவங்கும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Ind

இந்த போட்டியை ஸ்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் தமிழிலும், ஹாட் ஸ்டார் ஆப்பிலும் கண்டுகளிக்கலாம். இந்த டெஸ்ட் தொடரை தொடர்ந்து இந்திய அணி தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement