இன்னும் 60 ஓவர் கூட போடல அதுக்குள்ளே முதல் நாள் ஆட்டம் முடிஞ்சிடுச்சி – இந்தியா பக்கம் வீசும் அதிர்ஷ்ட காத்து

Rain-1
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று வெலிங்டன் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் மைதானத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

Ind-1

- Advertisement -

அதன்படி தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது இதுவரை முதல் நாள் தேனீர் இடைவேளை வரை இந்திய அணி 55 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்களை குவித்துள்ளது. பண்ட் 10 ரன்களுடனும், ரஹானே 38 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். துவக்க வீரராக அகர்வால் மட்டும் சற்று நிதானமாக விளையாடி 34 ரன்கள் குவித்தார்.

இந்நிலையில் தற்போது உணவு இடைவேளைக்குப் பிறகு போட்டி துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மைதானத்தில் மழை வலுவாக பெய்து வருகிறது. இதன் காரணமாக மைதானத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்ற அதிக நேரம் தேவைப்படும் என்பதால் மீதியிருக்கும் ஆட்டம் ரத்து செய்யப்படும் என்றும் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வரும் என்றும் தெரிகிறது.

Rain

மேலும் நியூசிலாந்து அணியின் அபார பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வரும் இந்திய அணிக்கு இந்த விடயம் சற்று ஆறுதலாக அமையும். ஏனெனில் துவக்க வீரர்கள் மற்றும் முக்கிய வீரர்களின் என விக்கெட்டை அடுத்தடுத்து விரைவாக இழக்க இந்திய அணி 101 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்து தடுமாறிவருகிறது. எனவே தற்போது பெய்யும் மழை இந்தியாவிற்கு அதிர்ஷ்டம் என்றே கூறலாம்.

Advertisement