நியூசி டி20 தொடர் இந்திய நேரப்படிக்கு இத்தனை மணிக்கு தான் துவங்கும். இந்த சேனலில் பார்க்கலாம் – விவரம் இதோ

- Advertisement -

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக 5 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே நியூசிலாந்து புறப்பட்டு சென்றது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை மறுதினம் 24ஆம் தேதி ஆக்லாந்தில் நடைபெறுகிறது.

ind vs nz 1

- Advertisement -

இந்த தொடரின் 2ஆவது டி20 26 ஆம் தேதி ஆக்லாந்திலும், மூன்றாவது டி20 போட்டி 29-ம் தேதி ஹாமில்டன் நகரிலும், நான்காவது டி20 போட்டி 31ம் தேதி வெலிங்க்டனிலும், ஐந்தாவது டி20 போட்டி அடுத்த மாதம் 2-ஆம் தேதியும் பே ஓவல் மைதானத்திலும் நடைபெற உள்ளன.

இந்நிலையில் இந்த தொடருக்கான கால அட்டவணை மற்றும் நேரத்தை இந்த பதிவில் பகிர்ந்துள்ளோம். அதன்படி பொதுவாக இந்தியாவில் டி20 போட்டி நடைபெற்றால் மாலை மற்றும் இரவு நேரத்தில் துவங்கும் அப்படி மாலை மற்றும் இரவு நேரத்தில் போட்டி துவங்கினால் இந்திய ரசிகர்கள் அதிகம் கண்டு களிப்பார்கள் என்பதால் அந்த நேரத்தில் டி20 போட்டிகள் துவங்கப்படுகிறது.

இந்நிலையில் நியூசிலாந்து நாட்டிற்கும், இந்திய நாட்டிற்கும் நேரம் மாறுபடுவதால் இந்திய நேரப்படி இந்த டி20 போட்டிகள் எத்தனை மணிக்கு துவங்கவும் என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் இருக்கும். அதன்படி இந்த டி20 தொடரின் அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி பகல் 12:30 மணிக்கு துவங்கும். அதேபோல் இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் நேரடியாக கண்டுகளிக்கலாம்.

Advertisement