பதாகையுடன் மைதானத்தினுள் ஓடி ரசிகர்கள். போட்டியை நிறுத்தியதால் பரபரப்பு – மைதானத்தில் நடந்தது என்ன ?

Aus
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இந்த தொடரானது இன்று காலை இந்திய நேரப்படி 9.10 மணிக்கு துவங்கியது. இந்த போட்டியில் வெற்றியுடன் துவங்க இந்திய அணியும், இந்திய அணியை பழிதீர்க்க ஆஸ்திரேலிய அணியும் பல பரிட்சை நடத்தின. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

INDvsAUS Toss

- Advertisement -

6 ஓவர்கள் முடிந்த நிலையில் திடீரென இரண்டு ரசிகர்கள் மைதானத்திற்குள் பதாகையுடன் நுழைந்தனர். அவர்கள் பதாகையை தூக்கிப் பிடித்து போராட்டம் நடத்தினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு வீரர்கள் ஓடி வந்து அவர்கள் இருவரையும் மைதானத்தில் இருந்து வெளியேற்றினர். சுமார் 30 வினாடிகள் போட்டி பாதிக்கப்பட்டது. அதன்பின் போட்டி தொடர்ந்து நடைபெற்றது.

இருவரும் கையில் ‘No $1B Adani Loan’ என்ற பதாகையுடன் மைதானத்திற்குள் நுழைந்தனர். அதானி குழுமம் சுரங்கத் தொழிலுக்கு குயின்ஸ்லாந்தில் அனுமதி பெற்றது. இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின்போது சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியுள்ளது.

adani

இதனால் அதானியை எதிர்த்து Stop Adani group சமீபத்தில் மீடியாவை சந்தித்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி ஒரு பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் அதானிக்கு கடன் வழங்க ஒப்புதல் வழங்க இருப்பதாக செய்திகள் வெளியானது. அவருக்கு கடன் வழங்கக் கூடாது என குரல் கொடுத்தது.

அதனை எதிர்த்து இன்று போட்டிக்கு முன்னதாகவே ரசிகர்கள் மைதானத்திற்கு வெளியிலும் சரி, உள்ளேயும் சரி போராட்டங்கள் எழுந்தன. இதன் எதிரொலியே மைதானத்தில் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement