கனடா போட்டி மழையால் ரத்து.. அடுத்த போட்டிகள் எப்போது? இந்தியாவின் சூப்பர் 8 சுற்று அட்டவணை இதோ

Rain
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வரும் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை விறுவிறுப்பான கட்டத்தை தொட்டுள்ளது. அதில் ஜூன் 15ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு ஃப்ளோரிடா நகரில் 33வது லீக் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம் வகிக்கும் இந்தியா மற்றும் கனடா கிரிக்கெட் அணிகள் மோதின.

ஆனால் ப்ளோரிடா நகரில் மாலை நேரத்தில் மழை பெய்ததால் அப்போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அதற்காக நடுவர்கள் காத்திருந்த போதிலும் மைதானத்தில் இருந்த தண்ணீரை வெளியேற்றுவதற்கு தாமதமானது. அதனால் இரவு 9:00 மணிக்கே அந்தப் போட்டி ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தார்கள். அதன் காரணமாக 2 அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்து கொடுக்கப்பட்டது.

- Advertisement -

இந்தியாவின் சூப்பர் 8:
அதனால் லீக் சுற்றின் முடிவில் 4 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்த இந்தியா 7 புள்ளிகளை பெற்று குரூப் ஏ பிரிவின் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது. இதைத்தொடர்ந்து நடைபெறும் சூப்பர் 8 சுற்றில் இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. அந்தப் போட்டி வரும் ஜூன் 20ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸில் உள்ள பார்படாஸ் நகரில் நடைபெற உள்ளது.

அதை முடித்துக்கொண்டு ஆன்ட்டிகுவா நகருக்கு செல்லும் இந்தியா தங்களுடைய 2வது சூப்பர் 8 போட்டியில் விளையாட உள்ளது. அந்தப் போட்டியில் வங்கதேசம் அல்லது நெதர்லாந்து அணியை இந்தியா சந்திக்க உள்ளது. தற்சமயத்தில் குரூப் டி பிரிவில் வங்கதேசம் 4 புள்ளிகளையும் நெதர்லாந்து 2 புள்ளிகளையும் கொண்டுள்ளது. எனவே அந்தப் போட்டியில் வங்கதேசம் அணியை இந்தியா எதிர்கொள்வதற்கு அதிகப்படியான வாய்ப்புள்ளது.

- Advertisement -

அதன் பின் கடைசியாக வரும் ஜூன் 24ஆம் தேதி செயின்ட் லூசியா நகரில் வலுவான ஆஸ்திரேலியாவை தன்னுடைய 3வது சூப்பர் 8 போட்டியில் இந்தியா சந்திக்கிறது. இந்த 3 போட்டிகளுமே இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்கும். இந்த 3 போட்டிகளில் குறைந்தது 2 வெற்றிகளை நல்ல ரன்ரேட்டுடன் பதிவு செய்தால் இந்திய அணியால் செமி ஃபைனலுக்கு தகுதி பெற முடியும்.

இதையும் படிங்க: ஜூன் 17 தான் கடைசி.. இந்தியாவில் நடைபெறும் அந்த தொடருக்கு வரமாட்டேன்.. ட்ரெண்ட் போல்ட் அறிவிப்பு

எனவே ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்தாலும் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிராக இந்தியா வெல்லும் என்று நம்பப்படுகிறது. அதை செய்தால் ஜூன் 27ஆம் தேதி கயானா நகரில் நடைபெறும் 2வது செமி ஃபைனலில் விளையாடுவதற்கு இந்தியா தகுதி பெறும். அந்த வகையில் இதுவரை அமெரிக்காவில் விளையாடிய இந்திய அணி அடுத்ததாக சூப்பர் 8 சுற்றில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் மண்ணுக்கு புறப்பட உள்ளது.

Advertisement