ஆயிரம் இருந்தாலும் அந்த விஷயத்துல விராட் கோலி கேப்டன்ஷிப் மாஸ், ரோஹித் வேஸ்ட் – முன்னாள் வீரர் சாடல்

rohith
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ள இந்தியா தன்னுடைய முதலிரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்தை தோற்கடித்தாலும் 3வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவிடம் வீழ்ந்து ஹாட்ரிக் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டது. அதனால் செமி ஃபைனலுக்கு செல்ல எஞ்சிய போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ள இந்தியா அடுத்ததாக வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. முன்னதாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற 3வது போட்டியில் 134 ரன்களை துரத்தி அந்த அணியை எளிதாக வெல்ல விடாமல் மடக்கிப் பிடித்த இந்திய பவுலர்கள் கடைசி ஓவர் வரை வெற்றிக்கு போராடினார்கள்.

Virat Kohli Rohit Sharma Fielding

- Advertisement -

ஆனால் பேட்டிங்கில் ஆரம்பத்திலேயே 5 விக்கெட்களை இழந்து 150 ரன்கள் கூட எடுக்க தவறியதால் தோல்வி பரிசாக கிடைத்தது. அதை விட அப்போட்டியில் பவுலர்களின் போராட்டத்தால் கைக்கு கிடைத்த வெற்றியை சுமாரான பீல்டிங் காரணமாக இந்தியா தாரை பார்த்தது என்றே கூறலாம். ஏனெனில் 52 ரன்களை விளாசி வெற்றியை பறித்த ஐடன் மார்க்ரம் முன்கூட்டியே கொடுத்த எளிதான கேட்ச்சை விராட் கோலி விட்டார். அடுத்த ஓவரிலேயே 59* ரன்களை குவித்து தோல்வியை பரிசளித்த டேவிட் மில்லர் முன்கூட்டியே கொடுத்த எளிதான ரன் அவுட் வாய்ப்பை கோட்டை விட்ட கேப்டன் ரோகித் சர்மா வெற்றியையும் நழுவ விட்டார்.

சுமாரான பீல்டிங்:
இப்படி முக்கிய நேரங்களில் செய்யும் சுமாரான ஃபீல்டிங் காரணமாக சமீபத்திய ஆசிய கோப்பை உட்பட பெரிய வெற்றிகள் எதிரணியின் கைகளுக்கு அசால்ட்டாக நழுவி போவது இப்போதெல்லாம் இந்திய அணியில் சர்வ சாதாரணமாகி விட்டது. இதனால் பீல்டிங் பயிற்சியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்று ரசிகர்கள் கொந்தளிப்பதையும் பார்க்க முடிகிறது. குறிப்பாக என்னதான் நீங்கள் நம்பர் ஒன் டி20 கிரிக்கெட் அணியாக இருந்தாலும் பீல்டிங் துறையில் சொதப்பினால் கோப்பையை வெல்ல முடியாது என்று ஏற்கனவே ரவி சாஸ்திரி எச்சரித்திருந்தார்.

Rohith

இந்நிலையில் முன்னாள் கேப்டன் விராட் கோலி தலைமையில் ஃபீல்டிங் துறை அபாரமாக இருந்ததாக தெரிவிக்கும் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா தலைமையில் அது மோசமாகி விட்டதாக சாடியுள்ளார். கடந்த 2017 முதல் 3 வகையான இந்திய அணியின் முழு நேர கேப்டனாக செயல்பட்ட விராட் கோலி ஃபிட்னஸ் மற்றும் ஃபீல்டிங் துறையில் அசத்தும் வீரர்களுக்கு மட்டுமே அணியில் இடம் என்ற நிலைமையை உருவாக்கினார். அதனால் அவரது தலைமையில் ஃபீல்டிங் துறையில் இந்தியா அசத்திய நிலையில் அவருக்குப்பின் பொறுப்பேற்ற ரோஹித் சர்மா ஃபிட்னஸை விட அனுபவத்திற்கு அதிக முன்னுரிமை கொடுக்கிறார்.

- Advertisement -

அதனால் தற்போதைய அணியில் தரமான பீல்டர்கள் குறைந்து விட்டதாக தெரிவிக்கும் அஜய் ஜடேஜா அஷ்வின், ஷமி போன்ற வீரர்கள் அந்தத் துறையில் பெரிய பின்னடைவை ஏற்படுத்துவதாக கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “என்னைப் பொறுத்த வரை ஆசிய அணிகள் ஃபீல்டிங் துறைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று நினைக்கிறேன். கடைசியாக விராட் கோலி தலைமையில் இந்தியா விளையாடிய போது தான் ஃபீல்டிங் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக நான் கேள்விப்பட்டேன். அவர் ஃபீல்டிங் துறையில் அசத்தும் வீரர்களை மட்டுமே தேர்வு செய்தார். ஆனால் அவர் கேப்டனாக வெளியேறியதும் பயிற்சியாளரும் மாறி விட்டார்”

Ajay-Jadeja

“ஆனால் தற்போதுள்ள புதிய கேப்டன் ஃபீல்டிங் துறை பற்றி கொஞ்சமும் கவலைப்படுவதில்லை. அவர் எப்போதும் பேட்டிங் மற்றும் பவுலிங் துறையை மட்டுமே பார்க்கிறார். அதனாலேயே தற்போதைய அணியில் துடிப்பும் குறைந்து விட்டது. நமது அணியில் எந்த மாதிரியான ஃபீல்டர்கள் உள்ளார்கள்? நம்மிடம் அஷ்வின், ஷமி உள்ளனர். அவர்கள் பந்து வீச்சில் சிறந்தவர்கள் என்றாலும் ஃபீல்டிங் துறையில் அவ்வளவு எதிர்பார்க்க முடியாது. ஆனால் ஒரு அணியை நீங்கள் தேர்வு செய்யும் போது உங்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து தேர்வு செய்ய வேண்டும். அந்த வகையில் தற்போதைய இந்திய அணி பீல்டிங் துறைக்கு போதிய கவனத்தை கொடுக்கவில்லை” என்று கூறினார்.

Advertisement