சாதகமான பிட்ச்சில் இந்தியா இப்படி செய்வாங்கன்னு எதிர்பார்க்கவே இல்ல – டேனிஷ் கனேரியா விமர்சனம்

Danish Kaneria INDia
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடி வரும் இந்தியா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த அதிர்ச்சி தோல்விகளை சந்தித்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டுள்ளது. குறிப்பாக முதல் போட்டியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் மெஹதி ஹசன் அதிரடியில் தலைகுனியும் தோல்வியை சந்தித்த இந்தியா 2வது போட்டியிலும் அவரது அதிரடியான சதத்தால் 5 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. போதாக்குறைக்கு 2 போட்டிகளிலுமே விராட் கோலி, ஷிகர் தவான் போன்ற முதுகெலும்பு பேட்ஸ்மேன்கள் சொதப்பலாக செயல்பட்டதும் இந்தியாவுக்கு தோல்வியை கொடுத்தது.

Siraj

- Advertisement -

அதை விட ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், ஷமி போன்ற முதன்மை பவுலர்கள் இல்லாத நிலைமையில் வாய்ப்பு பெற்ற இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் மோசமாக செயல்பட்டது தான் தோல்விக்கு முழு முதல் காரணமாக அமைந்தது. ஏனெனில் முதல் போட்டியில் 9 விக்கெட்டுகளை எடுத்த இந்திய பவுலர்கள் வெற்றி உறுதியாகி விட்ட மமதையில் கடைசி 6 ஓவரில் வங்கதேசத்தின் 10வது ஜோடி 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை தட்டிப் பறிக்கும் அளவுக்கு அஜாக்கிரதையாக பந்து வீசினார்கள்.

சரி அதிலாவது திருந்துவார்கள் என்று பார்த்தால் 2வது போட்டியிலும் 69/6 என ஆரம்பத்திலேயே மடக்கிப் பிடித்ததால் கத்துக்குட்டி வங்கதேசம் என்ன செய்து விடப் போகிறது? என்ற மிதப்பில் கடைசி நேரத்தில் அஜாக்கிரதையாக பந்து வீசிய இந்திய பவுலர்களுக்கு 148 ரன்கள் சாதனை பார்ட்னர்ஷிப் அமைத்த முகமதுல்லா – ஹசன் ஜோடி தக்க தண்டனை கொடுத்து மீண்டும் வெற்றியை தட்டிப் பறித்தார்கள். அதிலும் குறிப்பாக முகமது சிராஜ், தீபக் சஹார், ஷார்துல் தாகூர் போன்ற ஓரளவு நல்ல அனுபவம் வாய்ந்த பவுலர்கள் ஆரம்பத்தில் அசத்தலாக பந்து வீசினாலும் டெத் ஓவர்களில் யார்கர் போன்ற அடிப்படை பந்துகளை வீசாமல் ரன்களை வாரி வழங்கும் வகையில் பந்து வீசியது இந்திய ரசிகர்களையே கடுப்பாக வைத்தது.

Mohammed Siraj 1

தேர்ட் க்ளாஸ் பவுலிங்:

இத்தனைக்கும் முதலிரண்டு போட்டிகள் நடைபெற்ற டாக்கா மைதானம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தும் இப்படி இந்தியா மோசமாக செயல்பட்டது தான் ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இதனால் 2022 டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்திடம் 1 விக்கெட்டை கூட எடுக்காமல் சந்தித்த தோல்வியிலிருந்து இந்தியா எந்த பாடத்தையும் கற்கவில்லை என்பதும் தெரிகிறது. இந்நிலையில் இந்த தொடரில் பிட்ச் பவுலிங்க்கு சாதகமாக இருந்தும் இந்தியாவின் பவுலிங் 3வது தரத்தில் இருந்ததாக முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா கூறியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நான் சொல்வது கடினமாக இருக்கலாம். ஆனால் வங்கதேச பவுலிங் அபாரமாக இருந்த நிலையில் இந்திய பவுலிங் தேர்ட் க்ளாஸ் அளவில் இருந்தது. இந்திய கிரிக்கெட் அதை நோக்கி செல்கிறது? ஏனெனில் வங்கதேசத்தில் நிலவும் கால சூழ்நிலைகள் கிட்டத்தட்ட இந்தியாவை போன்றதாகும். அங்கேயும் பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்கள் தான் இருக்கிறது. ஆனாலும் அவர்களுடைய பவுலர்கள் மோசமாக செயல்பட்டார்கள்”

Kaneria

“இதை பார்க்கும் போது அவர்களிடம் விக்கெட் எடுக்கும் திறமை இல்லையா? அல்லது ஷமி, பும்ரா, புவனேஸ்வர் ஆகியோர் இல்லாமல் இந்தியா தடுமாறுகிறதா? என்ற கேள்வி எழுகிறது. என்னைப் பொறுத்த வரை தற்போதைய அணியில் இருக்கும் பவுலர்கள் திறமையானவர்கள் என்பதால் ஒன்று சேர்ந்து அணியாக பந்து வீச வேண்டும். குறிப்பாக முகமது சிராஜ் ஆக்ரோசமாக செயல்பட்டாலும் அதிகப்படியான ரன்களை வழங்கி சுமாராக பந்து வீசினார்”

“அவரும் ஷார்துல் தாகூரும் நல்ல அணுகு முறையில் செயல்பட்டதாக தெரியவில்லை. இந்திய பவுலர்கள் அனைவருமே கடைசி கட்ட ஓவர்களில் ஷார்ட் பிட்ச் பந்துகளை மட்டுமே வீசுகிறார்கள். யாருமே எதிரணி பேட்ஸ்மேனின் உடம்பை அல்லது யார்கர் பந்துகளை குறி வைக்கவில்லை. அத்துடன் 270 ரன்களை வங்கதேசம் எடுத்ததுமே நம்மால் இதை தொடுவது கடினம் என்று இந்திய அணியினர் ஆரம்பத்திலேயே மனம் தடுமாறி விட்டார்கள்” என்று கூறினார்.

Advertisement