முதல் முறையாக டி20 இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற மகளிர் அணி. அதுவும் இப்படி ஒரு அதிர்ஷ்டத்திலா ?- விவரம் இதோ

Womens
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் தற்போது மகளிர் டி20 உலககோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் இந்தப்போட்டியில் தொடர்ந்து 4 வெற்றிகளை பெற்ற இந்திய மகளிர் அணி 8 புள்ளிகள் பெற்று அரைஇறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

- Advertisement -

அரையிறுதிப் போட்டி இன்று சிட்னி மைதானத்தில் நடப்பதாக இருந்தது. இந்தியாவிற்கு எதிராக இங்கிலாந்து அணி 6 புள்ளிகளுடன் அரையிறுதிப் போட்டிக்கு வந்திருந்தது. அரையிறுதி போட்டிக்கு ‘ரிசர்வ் டே’ இல்லை என்று ஐசிசி அறிவித்திருந்தது .

இன்று காலை முதலே சிட்னி மைதானத்தில் மழை பெய்து கொண்டே இருந்தது. எப்படியாவது 10 ஓவர் போட்டியையாவது நடத்தி விட வேண்டும் என நடுவர்கள் காத்திருந்தனர். தொடர்ந்து மழை நீடித்ததால் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் புள்ளிப் பட்டியலில் 8 புள்ளிகள் பெற்றிருந்த இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது. ஏனெனில் இங்கிலாந்து அணி மொத்தம் 6 புள்ளிகளை மட்டுமே எடுத்திருந்தது.

- Advertisement -

இதன் மூலம் இந்திய மகளிர் அணி முதன்முதலாக டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. இதற்கு காரணம் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை சபாலி வர்மா, ஸ்மிருதி மந்தான ஆகிய பேட்ஸ்வுமன்களும் பூனம் யாதவ் இன் சுழற்பந்து வீச்சும், ஹர்மன்ப்ரீத் கவுரின் அருமையான மிகவும் சிறப்பான தலைமையும்தான் காரணமாகும் .

இதனால் கிரிக்கெட் ரசிகர்களும் இந்திய கிரிக்கெட் வீரர்களும் இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement