இந்நேரம் விராட் கோலி கேப்டனா இருந்திருந்தா இந்திய 2023 உ.கோ அணி 100% பிட்டா இருந்திருக்கும் – முன்னாள் பாக் வீரர் ஆதங்க பேட்டி

Virat Kohli
- Advertisement -

ஆசிய கண்டத்தின் சாம்பியனை தீர்மானிக்கப் போகும் 2023 ஆசிய கோப்பை செப்டம்பர் 30ஆம் தேதி பாகிஸ்தானிலும் சர்வதேச கிரிக்கெட்டின் சாம்பியனை நிர்ணயிக்கும் 2023 ஐசிசி உலக கோப்பை வரும் அக்டோபர் 5ஆம் தேதி இந்தியாவிலும் துவங்குகிறது. இதில் முதலாவதாக நடைபெறும் ஆசிய கோப்பையில் களமிறங்கப் போகும் தங்களுடைய அணியை பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகள் ஏற்கனவே அறிவித்து விட்டன. ஆனால் கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற உலகக்கோப்பையில் விளையாடும் முக்கிய வீரர்கள் காயத்தை சந்தித்துள்ளதால் இதுவரை இந்தியா தன்னுடைய அணியை அறிவிக்காமல் தாமதப்படுத்தி வருகிறது.

குறிப்பாக 4 வருடங்கள் கழித்தும் நம்பர் 4வது இடத்தில் விளையாடப் போவது யார் என்ற மெகா குழப்பமும் மிடில் ஆர்டரில் தரமான இடது கை பேட்ஸ்மேன்கள் இல்லை என்ற கவலையும் இந்திய அணியில் நீடிக்கிறது. இத்தனைக்கும் புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் கடந்த 2 வருடங்களில் சோதனை என்ற பெயரில் ஏராளமான மாற்றங்களை நிகழ்த்தியும் இதுவரை அதில் எந்த வெற்றியும் காணாததால் உலகக் கோப்பை துவங்குவதற்கு இன்னும் 60 நாட்கள் கூட இல்லாத கடைசிக்கட்ட நேரத்திலும் பதற்றத்துடன் சோதனைகளை அரங்கேற்றி வருகிறார்கள்.

- Advertisement -

விராட் கோலி இருந்திருந்தா:
அப்படி அடிக்கடி கேப்டன்களை மாற்றுவது புதிய வீரர்களை சோதிப்பது போன்ற அம்சங்களால் தங்களை தங்களை அழித்துக் கொண்டிருக்கும் மூடில் இருக்கும் இந்தியாவை இம்முறை நன்கு செட்டிலாகியுள்ள பாகிஸ்தான் தோற்கடிக்கும் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் சர்ப்ராஸ் நவாஸ் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் விராட் கோலி மட்டும் கேப்டனாக இருந்திருந்தால் இந்நேரம் ஆசிய மற்றும் உலகக்கோப்பைக்கான இந்திய அணி 100% தயாராக இருந்திருக்கும் என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ரசித் லதீப் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்திய அணி நிர்வாகம் ஏராளமான வீரர்களை வைத்து சோதனைகளை செய்தது. குறிப்பாக அவர்களுடைய பேட்டிங்கை பற்றி நீங்கள் பேசும் போது 4 முதல் 7 வரையிலான மிடில் மற்றும் லோயர் மிடில் ஆர்டரில் அடிக்கடி மாற்றங்கள் செய்த அவர்கள் எந்த புதிய வீரர்களையும் நிலையாக செட்டிலாகி விளையாட விடவில்லை”

- Advertisement -

“மேலும் கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் காயத்திலிருந்து நேரடியாக விளையாடுவதும் மிகப்பெரிய ரிஸ்க் ஆகும். ஒருவேளை அவர்கள் விராட் கோலியை கேப்டனாக அனுமதித்திருந்தால் இந்நேரம் உலகக்கோப்பைக்கான இந்திய அணி தயாராக 100% இருந்திருக்கும். தற்போதைய ஆசிய அணிகளில் மிடில் ஓவர்களில் அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடும் பிரச்சினை ஒரு குறையாக நான் பார்க்கிறேன்”

“ஆனால் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாட்டு அணிகளில் உள்ள மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இப்போதெல்லாம் மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களை ஸ்வீப் போன்ற ஷாட்களை அடித்து அதிரடியாக செயல்படுகின்றனர். மேலும் மொய்ன் அலி, அடில் ரசித் போன்றவர்கள் விக்கெட்டை எடுப்பதில் கவனம் செலுத்தும் நிலையில் நம்முடைய ஸ்பின்னர்கள் குறைந்த எக்கனாமியில் மட்டுமே பந்து வீசுவதில் கவனம் செலுத்துகின்றனர். இது இந்த உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறுவதால் ஆசிய அணிகளுக்கு எந்த சாதகத்தையும் ஏற்படுத்தாது என்று நினைக்கிறேன்” என கூறினார்.

- Advertisement -

அவர் கூறுவது போல காயங்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்றாலும் 2017 முதல் 2021 வரை முழு நேர கேப்டனாக செயல்பட்ட விராட் கோலி ஃபிட்னெஸ்க்கு மிகப்பெரிய முக்கியத்துவம் கொடுத்து நல்ல உடற்கட்டுடன் இருந்தால் மட்டுமே இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்ற நிலைமையை உருவாக்கினார். அதன் காரணமாக காயங்களின் சதவீதமும் குறைந்திருந்த நிலையில் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா ஃபிட்னஸை விட திறமையே முக்கியம் என்ற கோட்பாட்டை கொண்டுள்ளார்.

இதையும் படிங்க:அயர்லாந்து அணிக்கு எதிரான நாளைய முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

அதனால் அடிக்கடி காயம் மற்றும் பணிச்சுமை என்ற பெயரில் ஓய்வெடுத்த அவரால் 2022ஆம் ஆண்டு வரலாற்றிலேயே முதல் முறையாக 7 வெவ்வேறு வீரர்களை கேப்டனாக பயன்படுத்த வேண்டிய அவலம் இந்தியாவுக்கு ஏற்பட்டது. அப்படி கேப்டனே அணியில் நிலைத்து இல்லாமல் அடிக்கடி வெளியே இருந்த காரணத்தாலேயே இதுவரை இந்தியாவால் செட்டிலான உலகக்கோப்பை அணியை உருவாக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement