89 ஆண்டுகளுக்கு பிறகு இப்படி ஒரு போட்டியில் இந்திய அணி விளையாடுவது இதுவே முதல்முறை – வெளியான சுவாரசிய தகவல்

IND-1
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஜூன் மாதம் 18ஆம் தேதி நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் நாளுக்கு நாள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன. இந்த தொடருக்கான போட்டிக்கான அறிவிப்பு வெளியானதிலிருந்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி இந்த போட்டி குறித்தான சில விவரங்களும் தற்போது தொடர்ந்து வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.

INDvsNZ

- Advertisement -

அந்த வகையில் 89 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணி இப்படி ஒரு போட்டியில் பங்கேற்பது இதுவே முதல் முறை என்று ஒரு சுவாரசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி இந்திய டெஸ்ட் அணி இதுவரை எந்த அணிகளுக்கு எதிராக விளையாடினாலும் தாய்மண்ணில் அதாவது இந்தியாவிலோ அல்லது அவர்களை எதிர்த்து ஆடும் அணியை சேர்ந்த நாட்டிலோ தான் விளையாடும்.

ஆனால் இப்போது முதல் முறையாக நியூசிலாந்து அணிக்கு எதிராக நடுநிலையான மைதானத்தில் இங்கிலாந்தில் வைத்து இந்திய அணி ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. பொதுவாகவே எந்த இரு அணிகளாக இருந்தாலும் அந்த போட்டியை சேர்ந்த இரு நாடுகளில் ஏதோ ஒரு நாட்டில் தான் விளையாடும்.

lords cricket ground

ஆனால் பாகிஸ்தானில் இருக்கும் பாதுகாப்பு அச்சம் காரணமாக கடந்த பல ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும் மற்ற அணிகள் யாவும் நடுநிலையான அதாவது யுஏஇ போன்ற நாடுகளிலேயே தொடரில் கலந்து கொண்டு விளையாடி வருகிறது. ஆனால் ஐ.சி.சி தொடர்களில் மட்டுமே எதிர்த்து விளையாடும் இந்தியாவும் பாகிஸ்தானும் பல ஆண்டுகளாகவே கிரிக்கெட் விளையாட காரணத்தினால் இந்தியா நடுநிலை மைதானத்தில் இதுவரை விளையாடவில்லை.

ind

இந்நிலையில் தற்போது முதல்முறையாக இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து நடைபெற உள்ளதால் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடுநிலையான மைதானத்தில் இந்திய அணி விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement